சூர்யா குறித்து நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்ட டொவினோ தாமஸ்… என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க!
Actor Tovino Thomas shared a photo with actor Suriya | மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். இவர் நடிகர் சூர்யா உடன் சீன் படத்தின் ஷூட்டிங் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் டொவினோ தாமஸ் (Tovino Thomas). இவர் தொடர்ந்து மலையாள சினிமாவில் நடிக்கும் படங்கள் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் குறிப்பாக தமிழ் ரசிகர்களிடையேயும் அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் டொவினோ தாமஸ் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிலையில் தமிழ் மொழியில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான அபியும் அனுவும் என்ற படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகம் ஆனார். ஆனால் அந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் கவனத்தை ஈர்க்க தவறியதன் காரணாம தொடர்ந்து இவர் தமிழ் மொழியில் நாயகனாக நடிக்கவில்லை. அவ்வபோது தமிழ் மொழியில் நடித்து வரும் இவர் நடிகர் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் மொழியில் நடிகர் டொவினோ தாமஸ் நடித்து உள்ளார்.
அதன்படி நடிகர் டொவினோ தாமஸ் தற்போது சூர்யாவின் நடிப்பில் வெளியான சீன் படத்தில் நீண்ட கேமியோ செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சீன் படத்தில் நடித்துள்ளார் என்பது முன்பு எந்த தகவலும் வெளியாகத நிலையில் படத்தில் அவர் தோன்றியது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருந்தது. அது ஒரு சர்ப்ரைஸ் என்றால் படத்தின் முக்கியமான நாட்டை ரிவீல் செய்வதும் டொவினோ தாமஸ் தான். அது இதை விட பெரிய சர்ப்ரைஸாக ரசிகர்களுக்கு அமைந்தது குறிப்பிடத்தக்கது.




சூர்யா குறித்து நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்ட டொவினோ தாமஸ்:
இந்த நிலையில் இந்தப் படத்தில் டொவினோ தாமஸ் கேமியோ செய்ததற்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதற்கு பதிலளித்துள்ள நடிகர் டொவினோ தாமஸ் தனது எக்ஸ் தள பதிவில், மிக்க நன்றி. சூர்யா சார், உங்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. என்னை இந்த படத்தில் இணைத்துக்கொண்டதற்கும், நீங்கள் காட்டிய அன்பிற்கும் நன்றி. இந்த அழகான அனுபவத்தின் ஒரு பகுதியாக இருக்க முடிந்ததில் நான் மிகவும் நன்றியுணர்வுடன் இருக்கிறேன். அன்பும் மரியாதையும் என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் பதிவிற்கு முன்னதாக டொவினோ தாமஸ் சூர்யா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… பல்லவி அழுகாதீங்க.. அத பாத்து நானும் – ராஜ்குமார் சாரும் அழுதோம் – சாய் பல்லவி சொன்ன சம்பவம்!
டொவினோ தாமஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
🙏🏼🙏🏼🙏🏼🫂🫂❤️❤️🤗🤗 Thank you so much. @Suriya_offl
It was an absolute pleasure, Suriya sir. Thank you for having me on board and for all the love. Truly grateful to be a part of this beautiful experience. Lots of love and respect! ❤️
#SCENE— Tovino Thomas (@ttovino) November 14, 2026
Also Read… புதிய மைல்கல்லை எட்டிய தாய் கிழவி படம்… மகிழ்ச்சியில் படக்குழு