மருமகளை வன்கொடுமை செய்த மாமனார்.. கர்ப்பத்தை கலைக்க சென்றதால் வெளிவந்த சம்பவம்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி!
Kanyakumari Crime : கன்னியாகுமரி மாவட்டத்தில் மாமனார் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த கணவர், மாமியார் ஆகிய 3 பேர் மீது மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் மருமகள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரியில் மருமகளுக்கு மாமனார் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி வடக்கன்பாகத்தில் வசித்து வருபவர் ஸ்ரீ விக்னேஷ் ( 25 வயது). கூலித் தொழிலாளியான இவரும், 21 வயதான இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். சிறுவயதிலேயே தாயை இழந்த அந்தப் பெண் தந்தையின் அரவணைப்பு இல்லாமல் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். இவர்களது காதலுக்கு இளம் பெண்ணின் பாட்டி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஜூன் 12- ஆம் தேதி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதன் பின்னர், ஸ்ரீ விக்னேஷ் தனது மனைவியுடன் பெற்றோர் வீட்டில் ஒன்றாக வசித்து வந்தார்.
மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனார்
இந்த நிலையில், ஸ்ரீ விக்னேஷின் மனைவி 2 மாதங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார். இதற்காக மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்வதற்காக தக்கலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தனது மனைவியுடன் ஸ்ரீ விக்னேஷ் சென்றிருந்தார். அங்கு, நான் கர்ப்பமாக இருப்பதாகவும், கருவை கலைக்க வேண்டும் என்றும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தை மருத்துவர்கள் கேட்ட நிலையில், அந்த இளம்பெண் இந்த கர்ப்பம் என் கணவர் மூலம் ஏற்படவில்லை எனவும், மாமனார் தான் இதற்கு காரணம் என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்புக்கு வந்த காவலர்.. பள்ளி கழிவறையில் சடலமாக மீட்பு.. திருவண்ணாமலையில் நடந்த சம்பவம்!
மாமனாரால் கர்ப்பம் அடைந்த மருமகள்
அதன் அடிப்படையில், மணவாளக்குறிச்சி காவல் நிலையத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், கடந்த 3 மாதங்களாக மாமனார் செல்வகுமார் இந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 9- ஆம் தேதி இரவு கணவர் வீட்டுக்கு வர தாமதமான நிலையில் மாமியார் ராஜேஸ்வரி கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது, அந்தப் பெண்ணிடம் மாமனார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து, கணவரிடம் தெரிவித்தும் அவர் நம்பவில்லையாம்.
கணவர், மாமனார், மாமியார் மீது வழக்குப் பதிவு
இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், அந்தப் பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். அத்துடன், இந்த சம்பவத்தை வெளியே கூறினால் மாமனார் தற்கொலை செய்து கொள்வார் என்று கணவரும், மாமியாரும் மிரட்டி உள்ளது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மாமனார் செல்வகுமார், கணவர் ஸ்ரீ விக்னேஷ், மாமியார் ராஜேஸ்வரி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: நிலத்தை அளக்க லஞ்சம்! கூகுள் பே-வில் விழுந்த ரூ. 25 ஆயிரம்.. கோவையில் சிக்கிய நில அளவையர்!