AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நிலத்தை அளக்க லஞ்சம்! கூகுள் பே-வில் விழுந்த ரூ. 25 ஆயிரம்.. கோவையில் சிக்கிய நில அளவையர்!

Case Filed Against Coimbatore Land Surveyor : கோயம்புத்தூரில் நிலத்தை அளவீடு செய்வதற்காக ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் மற்றும் இடைத்தரகர் ஆகிய இருவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நிலத்தை அளக்க லஞ்சம்! கூகுள் பே-வில் விழுந்த ரூ. 25 ஆயிரம்.. கோவையில் சிக்கிய நில அளவையர்!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 Nov 2026 19:27 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிலத்தை அளவீடு செய்து தனிப்பட்டா வழங்குவதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக ரூ. 25000 லஞ்சம் பெற்ற நில அளவையர் உள்பட இருவர் மீது ஊழல் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் அருண்குமார். இவர், பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சூலூர் அருகே உள்ள கலங்கல் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு பட்டா பெறுவதற்காக ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து இருந்தார். இதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் நில அளவையர் பாலமுருகனை அணுகியுள்ளார். அதன்படி, நிலத்தை அளவீடு செய்வதற்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து மீண்டும் தன்னை தொடர்பு கொள்ளுமாறு நில அளவையர் தெரிவித்துள்ளார்.

ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்ட நில அளவையர்

அதன்படி, மீண்டும் நில அளவையர் பாலமுருகனை தொடர்பு கொண்ட அருண்குமாரிடம் நிலத்தை அளவீடு செய்து தனி பட்டா வழங்கும் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 20,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த, அருண்குமார் லஞ்சம் கொடுக்க முடியாது என்று கூறியதுடன், முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் நில அளவையர் பாலமுருகனுக்கு தெரிய வந்த நிலையில், அருண்குமாரை தொடர்பு கொண்டு நான் ஏற்கனவே கேட்ட ரூ. 20 ஆயிரத்துடன் சேர்த்து கூடுதலாக ரூ. 5 ஆயிரம் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: குழந்தைகளை காட்டில் விட்டு சென்றனரா பெற்றோர்? வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த கலெக்டர்!

ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார் அளிப்பு

அந்த பணத்தை தன்னிடம் கொடுக்காமல் இ-சேவை மையம் நடத்தி வரும் பிரவீன் குமாரின் கூகுளை பே-வுக்கு அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளார். அதன்படி, அருண்குமார் ரூ. 25,000 பணத்தை பிரவீன் குமாரின் கூகுளை பே அக்கவுண்டுக்கு அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து, நிலம் அளவீடு செய்யப்பட்டு, அதற்கான தனி பட்டா பெறுவதற்கான ஆவணங்களும் அருண் குமாரிடம் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, அருண்குமார் கோவை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நில அளவையர், இடைத்தரகர் மீது போலீஸ் வழக்குப்பதிவு

அந்த புகாரின் பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட நில அளவையர் பாலமுருகன், இ-சேவை மையம் நடத்தி வரும் பிரவீன் குமார் ஆகியோரிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், பிரவீன் குமாரின் செல்போனை கைப்பற்றி கூகுளை பே அக்கவுண்ட்டை பார்த்ததில், ரூ.25 ஆயிரம் வரவு வைக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், இருவர் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: ஊழலுக்கு எதிரான நடவடிக்கையால் சிலரின் பேஸ்மட்டம் ஆட்டம் கண்டுள்ளது..கல்வி விருது வழங்கும் விழாவில் முதல்வர் விஜய்!

Follow Us