AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விஜய் சேதுபதியின் ட்ரெயின் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? வெளியான அறிவிப்பு!

Train Movie Trailer: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்த திரைப்படம்தான் ட்ரெயின். இப்படமானது உருவாகி கிட்டத்தட்ட ஒரு ஆண்டை கடந்த நிலையில், 2026ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியில் வெளியாக தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பை படக்குழு பகிர்ந்துள்ளது.

விஜய் சேதுபதியின் ட்ரெயின் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? வெளியான அறிவிப்பு!
ட்ரெயின் திரைப்பட டிரெய்லர் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 26 Nov 2026 21:31 PM IST

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களிடையே பேமஸான நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. இந்த 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் இதுவரை 2 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்தி இயக்குநர் இயக்கத்தில் காந்தி டால்க்ஸ் என்ற படமும், இயக்குநர் அட்லீயின் தயாரிப்பில் பத்தா (Baththa Movie) என இரு படங்கள் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் 3வது வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படம்தான் ட்ரெயின் (Train Movie). இதை தமிழ் இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் (Director Mysskin) இயக்கியுள்ள நிலையில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் நடிகர்கள் நாசர், ஸ்ருதிஹாசன் மற்றும் நரேன், ஜெயராம் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படமானது முழுக்க முழுக்க ஒரு ரயிலில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் வெளியாக காத்திருக்கும் நிலையில், இதன் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: என்ன தூக்கி வெச்சதே இல்லல நீ.. டிடிஃஎப் வாசனிடம் பொஸசிவ்-ஆன அவரின் மனைவி – ப்ரோமோ!

ட்ரெயின் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:


விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் கூட்டணியில் உருவான ட்ரெயின் திரைப்படத்தின் ட்ரெய்லர், நாளை (27/11/2026) வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தகவலை நடிகர் விஜய் சேதுபதியும் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ட்ரெயின் படமானது 2026 டிசம்பர் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கும் நிலையில், அதை முன்னிட்டு நாளை ட்ரெய்லர் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆர்யாவின் ஹலோ காதல் திரைப்படத்திலிருந்து வெளியான மஜா மஜா வீடியோ பாடல்!

விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்:

விஜய் சேதுபதியின் இந்த ட்ரெயின் படமானது வித்தியாசமான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பல்வேறு தமிழ் நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். அந்த விதத்தில் இப்படத்தின் சென்சார் சான்றிதழ் கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலே கிடைத்திருந்தது. அதன்படி யு/ஏ தரச் சான்றிதழ் கிடைத்திருக்கும் நிலையில், 12 வயதிற்கும் மேல் உள்ள நபர்கள் திரையரங்குகள் சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us