AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு.. குவிக்கப்பட்ட மத்திய படையினர்!

Tiruparankundram Row: இன்று மாலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதும் மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிஆர்பிஎப் 15-வது படைப்பிரிவைச் சேர்ந்த 130 வீரர்கள், கமாண்டண்ட் சுனில் குமார் தலைமையில் கோவையிலிருந்து நேற்று இரவு மதுரை வந்தடைந்தனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு.. குவிக்கப்பட்ட மத்திய படையினர்!
திருப்பரங்குன்றத்தில் குவிக்கப்பட்ட மத்திய பாதுகாப்பு படையினர்..
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Nov 2026 07:10 AM IST

நவம்பர் 28, 2027: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) கட்டாயம் தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ள நிலையில், மலை முழுவதும் மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனை நிறைவேற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கடந்த நவம்பர் 24ஆம் தேதி வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தூணில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் 17 பக்க அறிக்கை தாக்கல் செய்து மன்னிப்புக் கோரியிருந்தார்.

இன்று மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் – உச்சநீதிமன்றம்

இந்த வழக்கு நவம்பர் 27ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தீபம் ஏற்றுவது தனது பணியல்ல என மாவட்ட ஆட்சியர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கார்த்திகை தீபத் திருவிழா தொடர்ந்து நடைபெறும் நிலையில், நவம்பர் 28ஆம் தேதி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கட்டாயம் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், மலை உச்சியில் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியதுடன், மலையின் பாதுகாப்புப் பொறுப்பை சிஆர்பிஎப் உடனடியாக ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க: தென் மாவட்டங்களில் தொடரும் மழை.. இன்று 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை..

13 பேருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!

இந்த விவகாரத்தில் தலைமைச் செயலாளர், டிஜிபி, மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி உள்ளிட்ட 13 பேருக்கு உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைமைச் செயலாளர் விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கோயில் அறங்காவலர் குழுவைக் கலைத்து, கோயில் நிர்வாகத்தை ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோரிடம் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்றும், தர்கா மற்றும் கோயில் பகுதிகளைப் பிரித்து வேலி அமைக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றத்தில் குவிக்கப்பட்ட மத்திய பாதுகாப்புப் படையினர்


இன்று மாலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதும் மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிஆர்பிஎப் 15-வது படைப்பிரிவைச் சேர்ந்த 130 வீரர்கள், கமாண்டண்ட் சுனில் குமார் தலைமையில் கோவையிலிருந்து நேற்று இரவு மதுரை வந்தடைந்தனர். தனக்கன்குளம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.. கடலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவு!!

தொடர்ந்து மேலும் 40 வீரர்கள் திருப்பரங்குன்றம் வந்துள்ளனர். மூன்று அதிகாரிகள் மற்றும் மூன்று பெண் அதிகாரிகள் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணிகளை வழிநடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கூடுதல் மத்திய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு வருகின்றனர்.

கோயில் மலைப்பகுதி, தீபத்தூண் மற்றும் சிக்கந்தர் தர்கா பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், திருப்பரங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. இன்று மாலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Follow Us