AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

யாசகம் எடுத்த பணத்தை துண்டு துண்டுகளாக கிழித்த தாய், மகன்.. தட்டி கேட்டதால் ஆவேசம்!

Mother and Son Tear Up Alms Money Publicly | திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோயில் வாசலில் யாசகம் எடுத்த சுமார் ரூ.10,000 பணத்தை தாய் மற்றும் மகன் இருவரும் இணைந்து துண்டு துண்டுகளாக கிழித்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாசகம் எடுத்த பணத்தை துண்டு துண்டுகளாக கிழித்த தாய், மகன்.. தட்டி கேட்டதால் ஆவேசம்!
கோயில் வாசலில் பணத்தை கிழித்த தாய், மகன்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Nov 2026 07:32 AM IST

திருச்செந்தூர், நவம்பர் 28 : திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோயில் (Tiruchendur Subramani Swami Temple) வாசலில் வசித்து வரும் தாய் மற்றும் மகன், தாங்கள் யாசம் எடுத்த பணத்தை துண்டு துண்டுகளாக கிழித்து வீசிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய், மகன் இருவரும் கோயில் வாசலில் அமர்ந்து இந்த வேலையை செய்த நிலையில், கோயிலுக்கு வந்த பக்தர்கள் அவர்களை மிகுந்த குழப்பத்துடன் பார்த்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

யாசகம் எடுத்த பணத்தை துண்டு துண்டுகளாக கிழித்த தாய், மகன்

திருச்செந்தூரில் மிகவும் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக விழா காலங்களின்போது இந்த கோயிலில் மக்கள் கூட்டம் அலைமோதும். கோயிலுக்கு வருவது மட்டுமன்றி, சிலர் கோயில் வளாகத்திலேயே தங்கியுள்ளனர். அந்த வகையில் தான் 70 வயது தாய் மற்றும் அவரது 40 வயது மகன் அந்த கோயில் வளாகத்தில் தங்கியுள்ளனர். அவர்கள், அங்கு வரும் பக்தர்களிடம் யாசகம் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : “பறிபோகுமா எம்எல்ஏ பதவி?”.. அருள் விக்னேஷ் கைதுக்கு பிறகு சட்ட நடைமுறைகள் சொல்வது என்ன?

தாய், மகன் செய்த அதிர்ச்சி செயல்

இந்த நிலையில் தான், தாய் மற்றும் மகன் சில நாட்களுக்கு முன்பு கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டத்திற்கு நடுவே அமர்ந்துள்ளனர். அவர்கள் அத்தனை நாட்களாக யாசகம் எடுத்து சேமித்த மொத்த பணத்தையும் வெளியே எடுத்துள்ளனர். அதில் ஏராளமான 10, 20, 50 ரூபாய் நோட்டுக்கள் இருந்துள்ளன. இந்த நிலையில் தான், அவர்கள் ஒவ்வொரு ரூபாய் நோட்டுக்களை எடுத்து கிழிக்க தொடங்கியுள்ளனர். அதனை கண்டு அங்கிருந்த பக்தர்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதையும் படிக்க : “ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்களா?”.. அனைவரும் தண்டிக்கப்படும் வரை ஓய மாட்டோம்.. அருள் விக்னேஷ் கைது குறித்து மு.க.ஸ்டாலின் காட்டம்!

எங்கள் பணம் : ஆவேசத்துடன் பதில் அளித்த தாய் மகன்

அப்போது சிலர் அவர்களிடம் சென்று ஏன் யாசகம் எடுத்த பணத்தை கிழித்து போடுகிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் அது, எங்கள் பணம் , அதனை கேட்க நீங்கள் யார் என கேட்டுள்ளனர்.

Follow Us