AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Rains: தென் மாவட்டங்களில் தொடரும் மழை.. இன்று 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை..

Rainfall Alert: நவம்பர் 28ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Rains: தென் மாவட்டங்களில் தொடரும் மழை.. இன்று 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Nov 2026 06:25 AM IST

நவம்பர் 28, 2026: தமிழகத்தில் நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக அடுத்த 6 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவின் தெற்குப் பகுதிகளிலிருந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் வழியாக கடலோர கர்நாடகா வரை சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை

இதன் காரணமாக நவம்பர் 28ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: “நீங்க கைது பண்ணல.. நாங்க கைது பண்ண வெச்சோம்”.. அதிமுகவின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. இபிஎஸ் பெருமிதம்!!

திருப்பூர், ஈரோடு, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 6 நாட்களுக்கான மழை முன்னறிவிப்பு

நவம்பர் 29: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தென் தமிழக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 30: வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.

டிசம்பர் 1: கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கைது – 201 பதிவுகள் நீக்கம்… முரணாக பதிவுகளை தவிருங்கள் – காவல்துறை எச்சரிக்கை

டிசம்பர் 2: தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 3: தெற்கு கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 28ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங் களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us