AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒன்றாக தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்ற விரோஷ் தம்பதி- ஜோடியாக வெளியிட்ட வீடியோ!

ViRosh Honeymoon: விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இருவருமே, கடந்த 2026 பிப்ரவரி இறுதியில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். அந்த விதத்தில் இவர்கள் இருவருமே, திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

ஒன்றாக தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்ற விரோஷ் தம்பதி- ஜோடியாக வெளியிட்ட வீடியோ!
விரோஷ் ஜோடிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 25 Mar 2026 14:41 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல காதல் ஜோடியாக இருந்து, தற்போது இல்லறவாழ்கையில் இணைந்திருப்பவர்கள் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) மற்றும் விஜய் தேவரகொண்டா (Vijay Devarekonda). இவர்கள் இருவருமே கீதா கோவிந்தம் (Geetha Govindam) என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக தொடர்ந்து சில படங்களில் நடித்துவந்தனர். இந்நிலையில் அதன் பின் கிட்டத்தட்ட 5 முதல் 6 வருடங்களுக்கும் மேலாக எந்த படங்களிலுமே இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில் இவர்கள் இருவருமே ஒரே இடத்திற்கு சுற்றுலா செல்வது, ஹோட்டல்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது என மறைமுகமாக டேட்டிங் செய்துவந்தனர். அந்த விதத்தில் இவர்களின் காதல், கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதியோடு திருமண பந்தத்தில் இணைந்தது. இந்நிலையில் இவர்கள் இருவரின் திருமணம் குறித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி பேசப்பட்டிருந்தது.

அந்த விதத்தில் இந்த ஜோடி தொடர்ந்து, திருமண கொண்டாட்டங்களில் இருந்த நிலையில், மனநிம்மதி, திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டம், ஒன்றாக பொழுதை கழிப்பதற்கு, தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அந்த வகையில், அங்கு தங்களின் விலையுயர்ந்த நேரத்தை ஒன்றாக செலவிட்டு வருவது குறித்து வீடியோ ஒன்றை, விரோஷ் தம்பதி (ViRosh) வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: நானி சார் எழுப்பும் சுவரில் ஒரு செங்கலாக இருக்க விரும்புகிறேன் – கென் கருணாஸ்

தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடுவது குறித்து விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட வீடியோ பதிவு:

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருமே கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்துவந்துள்ளனர். ஆரம்பத்தில் நல்ல நட்புடன் இருந்த இவர்கள் இருவருக்குள்ளும், கொஞ்சம் கொஞ்சமாக காதல் மலர தொடங்கியுள்ளது. இவர்களின் காதல் கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரியுடன் திருமண பந்தத்தில் இணைந்து விட்டது. தற்போது கணவன் மனைவியாக திருமண உறவில் இருந்துவருகிறார். அந்த விதத்தில் டோலிவுட் சினிமாவில் சிறந்த ஜோடி என்றும் ரசிகர்கள் தங்களின் கருத்தையும் தெரிவித்துவருகிறார்கள்.

இதையும் படிங்க: நா எதுனாலும் வெளிப்படையாக பேசுவேன்.. விஜய் பற்றி பேசிய வீடியோ – அதிரடி கருத்தை தெரிவித்த சமுத்திரக்கனி!

அந்த வகையில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்க, ராஷ்மிகா இணைந்து நடித்துவரும் படம்தான் ரணபாலி. இந்த படத்தை இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் இயக்க வரும் 2026 செப்டம்பர் 11ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவும் என கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்றுவருகிறதாம்.

Follow Us