AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஹனிமூனுக்கு தாய்லாந்து சென்ற விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா – வைரலாகும் பதிவு!

ViRosh Thailand Honeymoon: தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திர ஜோடியாக இருந்துவருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவருமே கடந்த 2026 பிப்ரவரி மாத இறுதியில் திருமணம் செய்துகொண்ட நிலையில், ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர். அது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஹனிமூனுக்கு தாய்லாந்து சென்ற விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா – வைரலாகும் பதிவு!
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாImage Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 22 Mar 2026 12:49 PM IST

தென்னிந்திய சினிமாவில் பேமஸ் நடிகராக இருந்துவருபவர் விஜய் தேவரகொண்டா (Vijay Devarekonda). இவர் இதுவரை குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருக்கிறார். ரசிகர்களின் நாயகனாக இருந்துவரும் விஜய் தேவரகொண்டா ரணபாலி (Ranabaali) மற்றும் ரவுடி ஜனார்தனா (Rowdy janardhana) போன்ற படங்களில் நடித்துவர்கிறார். இந்த திரைப்படங்கள் 2ம் 2026 ஆண்டிற்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) இருவருமே பல ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதியில் பெற்றோர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டிருந்தனர். திருமணம் முடிந்த கையேடு, ரசிகர்களுக்கு விருந்து, ஸ்வீட் வழங்குதல் மற்றும் தனது சொந்த ஊரில் நிகழ்ச்சி என திருமணத்தையே கோலாகலமாக கொண்டாடியிருந்தனர்.

அந்த வகையில் திருமணம் முடிந்து பிசியாக அடுத்தடுத்த நிகழ்ச்சிகள், விருது விழா போன்றவற்றை இவர்கள் கலந்துகொண்டிருந்தனர். அந்த வகையில் தற்போது இந்த ஜோடி, தங்களின் ஹனிமூனுக்காக (Honeymoon) தாய்லாந்தின் கோ சமுய் தீவிற்கு (Thailand) சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு ஷாக் தகவல்… ஜன நாயகன் படத்தில் மியூட் செய்யப்பட்ட வசனங்கள் – சென்சார் குழு அதிரடி!

ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்ற விரோஷ் ஜோடியின் புகைப்படம் குறித்த பதிவு:

நடித்தார் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவருமே தங்களின் ஹனிமூனை கொண்டாட தாய்லாந்து சென்றுள்ளனர். அவர்கள், அங்கு சொகுசு விடுதியொன்றில் தங்கியுள்ளனர். கடற்கரையைப் பார்த்தவாறு அமைந்திருந்த ஒரு பெரிய தனியார் ஏர்பிஎன்பி வில்லாவில் தங்கியுள்ளார்களாம். அவர்களின் திருமணக் கொண்டாட்டங்களைப் போலவே, அவர்களின் ஹனிமூனிலும் தனித்துவத்தை காட்டும் விதத்தில் அவர்கள் இவ்வாறு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ஜோடிதான் ட்ரெண்டிங் ஜோடியாக சினிமாவில் இருந்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் நிச்சயம் பவர்ஃபுல்லாக இருக்கும் – ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!

பல ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடித்துவரும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா :

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவருமே டியர் காம்ரேட் என்ற படத்திற்கு பின் எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. இந்த படத்தில் அவர்களின் காதல் காட்சிகள் மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்ட நிலையில், அதை தொடர்ந்து எப்போது நடிப்பார்கள் என எதிர்பார்க்கவைத்தது. அந்த வகையில் இயக்குநர் பவன் பசம்செட்டி இயக்க, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிக்கா இருவரும் இணைந்து நடித்துவருகிறார். இது கிட்டத்தட்ட 60வது காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறதாம். இப்படம் 2026 செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Follow Us