கர படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு கதாப்பாத்திரத்தின் பெயர் இதுதான் – வெளியானது போஸ்டர்
Kara movie Suraj Venjaramoodu Poster: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு. இவர் சமீபத்தில் தமிழ் சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கர படத்தில் சுராஜ் வெஞ்சரமூடுவின் கதாப்பாத்திர போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு. ஆரம்ப காலக்கட்டத்தில் மிமிகிரி ஆர்ட்சிஸ்டாக தனது பணியைத் தொடங்கிய சுராஜ் வெஞ்சரமூடு பிறகு மலையாள சினிமாவில் காமெடி நடிகராக நடிக்கத் தொடங்கினார். காமெடியனாக பல நூறு படங்களில் நடித்து வந்த சுராஜ் வெஞ்சரமூடு பிறகு படங்களில் கதையின் நாயகனாக நடித்து வந்தார். தொடர்ந்து மலையாள சினிமாவில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் மலையாள சினிமாவில் சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் வெளியான படங்கள் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த சுராஜ் வெஞ்சரமூடு தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதில் குறிப்பாக தமிழ் மொழியில் சுராஜ் வெஞ்சரமூடு அதிக அளவிலான படங்களில் நடித்து வருகிறார். அதன்படி சுராஜ் வெஞ்சரமூடு தமிழில் வீர தீர சூரன் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான யூத் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். இந்த நிலையில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் சுராஜ் வெஞ்சரமூடு நடிகர்கள் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் படங்களில் நடித்து வருகிறார்.




கர படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு கதாப்பாத்திரத்தின் பெயர் இதுதான்:
இந்த நிலையில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து சுராஜ் வெஞ்சரமூடு கர படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாப்பாத்திர போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டு வருகின்றது. அதில் தற்போது நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவின் கதாப்பாத்திர போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த கர படத்தில் சுராஜ் வெஞ்சரமூடுவின் கதாப்பாத்திரத்தின் பெயர் பரதன் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Youth Movie: சிலம்பரசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற யூத் படக்குழு – வைரலாகும் பதிவு!
கர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
BHARATHAN…
On duty.Next drop today at 5 PM ❤️#FacesOfKara#KaraFromApril30
Directed by @vigneshraja89
Produced by @IshariKGanesh
A @gvprakash musical 🥁@dhanushkraja #SurajVenjarmmoodu @VelsFilmIntl @velsmusicintl @kushmithaganesh @ThinkStudiosInd @alfredprakash17 pic.twitter.com/bwR0VjeGcF— Vels Film International (@VelsFilmIntl) March 25, 2026
Also Read… ஏப்ரல் மாதம் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போனது த்ரிஷ்யம் 3 படம் – மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு