AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன் – என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா?

Shruti Haasan Recent Interview Viral On Social Media: தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டியில் அவரது அப்பா மற்றும் கமல் ஹாசன் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன் – என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா?
ஸ்ருதி ஹாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Mar 2026 16:55 PM IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி பன் இந்திய அளவில் கமல் ஹாசனின் மூத்த மகளாக அறிமுகம் ஆனவர் ஸ்ருதி ஹாசன். இவர் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆவதற்கு முன்னதாகவே பாடல்கள் பாடி ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக 7-ம் அறிவு படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து நடிகையாகப் பலப் படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன் அவ்வபோது படங்களில் பாடல்களையும் பாடி வருகிறார். இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் அவரது தந்தை கமல் ஹாசன் மற்றும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்தும் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அப்பா மற்றும் ரஜினிகாந்த் சார் இருவரும் கடின உழைப்பாளிகள்:

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகும் படங்கள் போட்டிப் போடுகிறதோ இல்லையோ அவர்களின் ரசிகர்கள் தொடர்ந்து போட்டிப் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் பேட்டி ஒன்றில் பேசிய போது அப்பா மற்றும் ரஜினிகாந்த் சார் இருவரும் கடின உழைப்பாளிகள்.

மேலும் அவர்கள் தங்கள் பணிக்காகத் தங்களின் முழு உழைப்பையும் அமைதியாக அளிக்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பம், உறவுகள் என எல்லாவற்றையும் நிர்வகித்து, மிருகங்களைப் போல உழைக்கிறார்கள் என்று ஸ்ருதி ஹாசன் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Kara Movie: தனுஷின் ஸ்பீசிற்கு தயாரா? கர படத்தின் ஆடியோ லான்ச் எப்போது தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் ஸ்ருதி ஹாசனின் பேச்சு:

Also Read… Prabhu Deva: வீடியோ பாடலின் மூலம் சினிமாவில் அறிமுகமான பிரபு தேவாவின் மகன்!

Follow Us