அரசுப் பள்ளியில் மாணவர்கள் தவெக.. தவெக.. என கோஷம்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்!
Students Shouted Slogans TVK: காரைக்குடி அரசுப் பள்ளியில் அமைச்சர் பிரபு ஆய்வு மேற்கொண்ட நிலையில், மாணவர்கள் அனைவரும் தவெக... தவெக.. என கோஷம் எழுப்பினர். அப்போது, அமைச்சர் பிரபு மாணவர்களை நோக்கி மைக்கை பிடித்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலானது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆய்வு என்ற பெயரில் திடீரென சென்று அங்கிருந்த மாணவர்களிடம் கேள்விகள் கேட்டும், தமிழக வெற்றிக் கழகம், முதல்வர் விஜய் தொடர்பாக பாடங்கள் எடுத்து அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்தனர். இதற்கு, பல்வேறு தரப்பு மக்களும் எதிர்ப்புகளையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதே போல, அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர் பிரபு சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியில் இருந்த மாணவர்களை தமிழக வெற்றி கழகம், தமிழக வெற்றி கழகம் என கோஷம் எழுப்ப வைத்து அதனை மைக் பிடித்து வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சர்ச்சையாகும் அரசுப் பள்ளிகளின் அமைச்சர் ஆய்வு
இந்த வீடியோவுக்கு தமிழகத்தில் வெற்றிக் கழகத்தை சேர்ந்த பலரும் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதே போல, சமூக நல ஆர்வலர்களும் குழந்தைகளிடம் அரசியலை திணிக்க வேண்டாம் என்று கருத்து தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டதுடன், அங்கிருந்த மாணவியிடம் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறி அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.




மேலும் படிக்க:சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு என்ற பெயரில் அச்சுறுத்தல்; த.வெ.க. அரசை கண்டித்து தங்கம் தென்னரசு அறிக்கை
பள்ளியில் முதல்வர் படம் – பாடல் பாடுவது
இதே போல, தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு அரசுப் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் சென்று தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் புகைப்படத்தை மாட்டுவது போலவும், மாணவர்களிடம் முதல்வர் விஜய் குறித்து கேள்விகள் கேட்பதும், அவர் நடித்த படங்களில் உள்ள பாடல்களை பாடுமாறு கூறுவதும் என்பன உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதுடன் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர். இதற்கும் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
அரசுப்பள்ளிகளில் இதுபோன்று இனி நடக்காது என உறுதியளித்த ராஜ்மோகன் இப்போது என்ன பதில் வைத்துள்ளார்?
தனியார் பள்ளிகளில் இதை செய்வீர்களா?
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா? pic.twitter.com/OBzMeeNoPT
— Blue Sattai Maran (@tamiltalkies) August 2, 2026
ஏற்கெனவே அறிவுறுத்திய முதல் அமைச்சர்
அப்போதுதான், தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் அரசு பள்ளிக்கு சென்று ரூல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட வேண்டாம் என்று அமைச்சர்கள் கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில், அதற்கு மாறாக அரசு பள்ளியில் அமைச்சர் பிரபுவின் செயல்பாடு கடும் விமர்சனத்தை எழுப்பி உள்ளது.
மேலும் படிக்க: பதைபதைக்கும் விபத்து.. மதுரை அருகே ஜேசிபி மீது கார் மோதி கோர விபத்து.. ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!