AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பதைபதைக்கும் விபத்து.. மதுரை அருகே ஜேசிபி மீது கார் மோதி கோர விபத்து.. ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

Madurai JCB And Car Accident: மதுரை அருகே சாலை பணிகளில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் அதன் ஓட்டுநர் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பதைபதைக்கும் விபத்து.. மதுரை அருகே ஜேசிபி மீது கார் மோதி கோர விபத்து.. ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
மதுரையில் விபத்துக்குள்ளான வாகனங்கள்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 03 Aug 2026 18:17 PM IST

மதுரை மாவட்டம், மேலூர் அருகே தனியாமங்கலத்தில் நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் ஜேசிபி வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அந்த சாலையில் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஜேசிபி வாகனம் இது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த விபத்தை பார்த்த சாலை பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிய நபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜேசிபி வாகனம் – கார் மோதியதில் ஓட்டுநர் பலத்த காயம்

அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனே, விபத்தில் சிக்கிய கார் ஓட்டுநரை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி முதலுதவி அளித்துவிட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி, அரசு மருத்துவமனையில் கார் ஓட்டுநர் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் படிக்க: திமுக MLA மார்க்கண்டேயனுக்கு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன்.. சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க விலக்கு!!

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த கார் ஓட்டுநர்

ஆனால். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தனியாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்து நடந்த இடத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை

சாலை பணிகள் நடைபெற்று வந்த சாலை வழியாக போக்குவரத்து நடைபெற்று வருவதன் காரணமாக, அங்கு நடந்த சாலை விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே, விபத்துக்குள்ளான கார் மற்றும் ஜேசிபி வாகனம் ஆகியவற்றை போலீசார் மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். சாலை பணிகள் நடைபெற்று வந்த சாலையில் நிகழ்ந்த விபத்தும், அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமும் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: வடிவேலு பட பாணியில் நாடகம்.. வீட்டு வாசலில் விழுந்து பணம் பறித்த பெண்.. சிக்க வைத்த இளைஞர்கள்!!

Follow Us