எடப்பாடி அளித்த பதவிகள் தேவையில்லை.. எஸ்.பி. வேலுமணி திடீர் போர்க்கொடி!
S.P. Velumani Not Want Party Post: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அளித்த கட்சி பதவிகள் வேண்டாம் என்றும், டி.டி. வி. தினகரன் மற்றும் சசிகலாவை மீண்டும் அதிகமுகவில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்து தனி அணியாக திரண்டனர். அத்துடன் தமிழக வெற்றிக் கழகத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதன் காரணமாக அவர்களது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மீண்டும் எஸ். பி. வேலுமணி உள்ளிட்டோருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிப் பதவிகளை வழங்கினார். தற்போது, இந்த பதவிகள் தங்களுக்கு வேண்டாம் எனவும், டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று எஸ். பி. வேலுமணி திடீர் போர் கொடி தூக்கி உள்ளார்.
சசிகலா – டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும்
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எம். ஜி. ஆர். ஆட்சி காலத்தில் இருந்து அதிமுகவுக்காக உழைத்தவர்கள். இதேபோல, எடப்பாடி பழனிசாமி முதல்வர் மற்றும் பொதுச் செயலாளர் ஆவதற்கும் உழைத்தவர் சி. வி. சண்முகம். தொடர்ந்து, அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை மேலும் தொடரக்கூடாது. அதிமுக பலப்படுத்தப்பட வேண்டும். இதற்காக, அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட டி. டி. வி. தினகரன் மற்றும் சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். இதே போல, எங்களிடமிருந்து பறிக்கப்பட்ட கட்சி பதவிகள் மற்றும் பழைய பொறுப்புகளை அளித்தால் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு.. நிரந்தர சார்பதிவாளர்- உதவி அலுவலர் சஸ்பெண்ட்!
எஸ்.பி.வேலுமணி அணி மீது எடப்பாடி தரப்பு புகார்
அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனி அணியாக செயல்பட்டு வந்த எஸ். பி. வேலுமணி தலைமையிலான அணியினர் மீது சபாநாயகரிடம் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி எடப்பாடி தரப்பு மனு அளித்தது. இதனால், எடப்பாடி உடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட எஸ். பி. வேலுமணி தரப்பினர் மீண்டும் அதிமுகவில் இருந்து செயல்பட தொடங்கினர். இதில், எஸ். பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு அதிமுக துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு பதவிகள் வழங்கப்படவில்லை. இதனால், அவர்களுக்கும் பதவி வழங்க வேண்டும் என்று எஸ். பி. வேலுமணி வலியுறுத்தி வந்தார்.
அதிமுகவை வலுப்படுத்த வேண்டும்
அவர்களுக்கு பதவி வழங்கும் வரை எங்களுக்கான பதவிகளை ஏற்க மாட்டோம் என்று போர்க்கொடி தூக்கி இருந்தார். இதே போல, சி.வி. சண்முகம் தலைமையிலான அணியினர் தற்போதும் எடப்பாடி தலைமையுடன் சமரசம் இல்லாத நிலையில் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கட்சியில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைத்து அதிமுகவை வலுப்படுத்தி செயல்பட வேண்டும் என்று எஸ். பி. வேலுமணி தரப்பு வலியுறுத்தி உள்ளது.
மேலும் படிக்க: காஞ்சிபுரம் தொழில் வளர்ச்சி மையத்தில் முதல்வர் ஜோசப் விஜய் ஆய்வு.. அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!