Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kuayadu Lohar : மலையாளத்தில் டோவினோ தாமஸுடன் கைகோர்க்கும் கயாடு லோஹர்!

Tovino Thomas And Kayadu Lohar Alliance: தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகை காயடு லோஹர். இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் இணைந்து நடித்துவரும் நிலையில், மேலும் நடிகர் டோவினோ தாமஸின் புதிய படத்திலும் இணைந்துள்ளார். இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kuayadu Lohar : மலையாளத்தில் டோவினோ தாமஸுடன் கைகோர்க்கும் கயாடு லோஹர்!
டோவினோ தாமஸ் மற்றும் கயாடு லோஹர் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 25 Jun 2025 16:17 PM

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்தின் மூலமாகவே முன்னணி நடிகையாக மாறியவர் கயாடு லோஹர் (Kayadu Lohar). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் டிராகன் (Dragon) . இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் (Ashwath Marimuthu) இயக்கத்தில் கடந்த 2025, பிப்ரவரி மாதத்தில் வெளியானது இந்த டிராகன் படம். இந்த படத்தில் தமிழ் இயக்குநர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) முன்னணி நாயகனாக நடித்திருந்தார் . இந்த படமானது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. சுமார் ரூ.200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இதைத் தொடர்ந்து சிலம்பரசன் (Silambarasan) , ஜிவி பிரகாஷ் GV Prakash) மற்றும் அதர்வா (Athrvaa)  என அடுத்தடுத்த பிரபல நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த தமிழ்த் திரைப்படங்களைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் நுழைந்துள்ளார்.

டிஜோ ஜோஸ் ஆண்டனியின் (Dijo Jose Antony) இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் முன்னணி நாயகனாக நடிகர் டோவினோ தாமஸ் (Tovino Thomas) நடிக்கவுள்ளார். இந்நிலையில், இது தொடர்பான பதிவை கயாடு லோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

டோவினோ தாமஸ் – கயாடு லோஹர் கூட்டணி பட அறிவிப்பு :

 

View this post on Instagram

 

A post shared by Dijo Jose Antony (@dijojoseantony)

டோவினோ தாமஸ் – கயாடு லோஹர் கூட்டணி :

நடிகர் டோவினோ தாமஸின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் நரிவேட்டை. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருந்தார். இயக்குநர் சேரன் வில்லனாக நடித்திருந்த இப்படமானது சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து டோவினோ தாமஸின் நடிப்பில் அடுத்தடுத்த புதிய படங்கள் உருவாகிவரும் நிலையில், இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனியின் இயக்கத்தில் புதியப் படத்தில் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் டோவினோ தாமஸுக்கு ஜோடியாக நடிகை காயடு லோஹர் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகித் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படமானது இந்த 2025ம் ஆண்டு இறுதி அல்லது 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காயடு லோஹர் புதிய படங்கள்

டிராகன் படத்தை அடுத்ததாக இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் இணைந்த படம் இதயம் முரளி. இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இதை தொடர்ந்து அடுத்து STR49 திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக இணைந்தார். சமீபத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்த நிலையில், இப்படம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் இம்மார்ட்டல் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த வருகிறார். இந்த படத்தில் அவர் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்துதான் டோவினோ தாமஸுடன் மலையாளத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.