மன்மதனே நீ கலைஞன் தான்… 21 ஆண்டுகளை நிறைவுச் செய்தது சிலம்பரசனின் மன்மதன் படம்
21 Years Of Manmadhan Movie: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் மன்மதன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகளைக் கடந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் கடந்த 12-ம் தேதி நவம்பர் மாதம் 2004-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் மன்மதன். இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஜே.முருகன் இயக்கி உள்ள நிலையில் படத்தின் திரைக்கதையை நடிகர் சிலம்பரசன் (Silambarasan) உடன் இணைந்து இயக்குநர் ஏ.ஜே.முருகன் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கவுண்டமணி சிந்து தோலானி அதுல் குல்கர்னி, மந்திரா பேடி, யானா குப்தா, பிருந்தா பரேக், அர்சூ கோவித்ரிகர், டி.பி.கஜேந்திரன், சத்யன், சந்தானம், கிரேன் மனோகர், பாலகிருஷ்ணா, மயூரி, குகன் சண்முகம், டாக்டர் எஸ். சுரேஷ் குமார் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான இந்தியன் தியேட்டர் புரடெக்ஷன் சார்பாக தயாரிப்பாளர் எஸ்.கே.கிருஷ்ணகாந்த் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல படல்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் படக்குழுவினரும் ரசிகர்களும் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
சிலம்பரசனின் மன்மதன் படத்தின் கதை என்ன?
மன்மதன் படத்தில் நடிகர் சிலம்பரசன் அண்ணன் தம்பி என இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார். இதில் தம்பி மொட்டை மதன் ஒரு பெண்ணை கல்லூரியில் படிக்கும் போது காதலிப்பார். அந்த பெண் மதனை காதலிப்பதாக கூறிவிட்டு தனது சீனியர் உடன் தகாத உறவில் இருப்பதை மொட்டை மதன் பார்த்துவிடுவார். இந்தனைப் பார்த்தது அவர்களை கொலை செய்துவிட்டு மொட்டை மதனும் தற்கொலை செய்துகொள்வார்.
Also Read… இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கருப்பு… விரைவில் வெளியாகும் ரீலீஸ் அப்டேட்!
தம்பி ஏமாற்றப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டதை ஏற்கமுடியா அண்ணன் மதன் ராஜா காதலிப்பதாக கூறி ஏமாற்றும் பெண்களை எல்லாம் தேடித் தேடி கொலை செய்யும் சைக்கோ கொலையாளியாகிறார். இவரை எதிர்பாராத விதமாக சந்திக்கும் ஜோதிகாவிற்கு இவர் மீது காதல் ஏற்படுகின்றது. இதனைத் தொடர்ந்து இந்த பெண் தன்னிடம் உண்மையாக இருப்பதைப் பார்த்த மதன் குமாருக்கு அவருடன் பழகுவது அந்த பெண்ணிற்குதான் ஆபத்து என்பதை உணர்ந்து அவரிடம் இருந்து விலக முடிவு செய்கிறார். இறுதில் தொடர்ந்து கொலைகளை செய்வதை அவர் நிறுத்தினாரா? அல்லது ஜோதிகாவின் காதல் கைகூடியதா என்பதே படத்தின் கதை.
Also Read… உலகம் முழுவதும் ரூ. 70 கோடிக்கு மேல் வசூலித்த பைசன் காலமாடன் – கொண்டாட்டத்தில் படக்குழு



