விஷாலுடன் பிறந்தநாள் கொண்டாடிய சாய் தன்ஷிகா.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் வீடியோ!
Vishal And Sai Dhanshika: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல நடிகராக இருப்பவர் விஷால். இவரும் நடிகை சாய் தன்ஷிகாவும் காதலித்துவந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிச்சயம் செய்துகொண்டனர். இந்நிலையில் சமீபத்தில் தனது வருங்கள மனைவியான சாய் தன்ஷிகாவின் பிறந்தநாளை விஷால் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக இருப்பவர்தான் விஷால் (Vishal). இவரின் நடிப்பில் இறுதியாக மத கஜ ராஜா (Madha Gaja Raja) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது சுந்தர் சி (Sundar C) இயக்க, 12 வருடங்களுக்கு பின் வெளியானது. இந்த படமானது விஷாலுக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இதை அடுத்ததாக தற்போது இவர் மகுடம் (Magudam) என்ற படத்தை இயக்கி அதில் நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கானது விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் இது தொடர்ப்பன வீடியோ வெளியானது. இந்நிலையில் கடந்த 2025 நவம்பர் 20 ஆம் தேதியில் நடிகை சாய் தன்ஷிகா (Sai Dhanshika) தனது 36வது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். இந்த பிறந்தநாளை சிறப்பிக்கும் விதத்தில் நடிகர் விஷால் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஒன்றை இவருக்கு கொடுத்துள்ளார். தனது வருங்கால மனைவியான சாய் தன்ஷிகாவிற்கு சர்ப்ரைஸாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோவில் நடிகர் விஷால் மற்றும் அவரின் வருங்கால மனைவியான சாய் தன்ஷிகா இருவரும் மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடிய காட்சி இடம்பெற்றுள்ளது.




இதையும் படிங்க: அந்த படம் எனக்கு அளவவு பெரிய வெற்றியை கொடுக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை- விஜய் சேதுபதி!
சாய் தன்ஷிகாவின் பிறந்தநாளை கொண்டாடிய விஷால்
Actress #SaiDhanshika Celebrated Her Birthday With His Future Husband Actor #Vishal 🎥 🎂#HBDSaiDhanshika #ActorVishal #HappyBirthdaySaiDhanshika @VishalKOfficial @SaiDhanshika @HariKr_official @johnsoncinepro @PRO_ajaykumar @PROSaiSatish pic.twitter.com/UXYN5pMfix
— All India Vishal Online Fans Club (@AIVishal_OFC) November 22, 2025
விஷால் – சாய் தன்ஷிகாவின் திருமணம் எப்போது?
நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவரும் காதலித்துவருவதாக சில மாதங்களுக்கு முன், நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தனர். தங்களின் காதலை ரசிகர்களுக்கு அறிவித்த விஷால் தனது பிறந்தநாளில் இருவரும் திருமணம் செய்வதாக கூறியிருந்தார். மேலும் இவர்களின் திருமண நடிகர்கள் சங்க கட்டிடத்தில்தான் நடக்கும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் செடிகள் சங்க கட்டிடத்தின் வேலைகள் இன்னும் முடிவடையவில்லை என்ற நிலையில், விஷாலின் பிறந்தநாளான கடந்த ஆகஸ்ட் 29ம் தேதியில் சிம்பிளாக நிச்சயம் செய்துகொண்டனர்.
இதையும் படிங்க: யாரும் எதிர்பார்க்காத காம்போ.. ரஜினிகாந்த்தின் தலைவர்173 படத்தை இயக்குபவர் இவரா?
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவந்தது. அதை தொடர்ந்து, இவர்கள் திருமணம் நடிகர்கள் சங்க கட்டிடம் திறப்பு விழாவில் நடக்கும் என்று விஷால் கூறியிருந்தார். இந்த நடிகர்கள் சங்க கட்டிடம் வரும் 2026ம் ஆண்டில் திறக்க முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி விஷால் மற்றும் சாய் தன்ஷிகாவின் திருமணம் 2026ம் ஆனதில் நடைபெறும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பை விஷால் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.