Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போது இவர்தான் – வைரலாகும் தகவல்

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தற்போது 7-வது வாரம் முடிவிற்கு வந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போது இவர்தான் – வைரலாகும் தகவல்
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Nov 2025 11:25 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு 20 போட்டியாளர்களுடன் தொடங்கியது. அதன்படி இந்த சீசன் தொடங்கிய முதல் வாரம் முடிவதற்கு முன்னதாகவே வீட்டில் இருந்து நந்தினி என்ற போட்டியாளர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து அந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன் ராஜ், வாட்டர்மெலன் திவாகர் என தொடர்ந்து இதுவரை 8 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். நிகழ்ச்சி தொடங்கிய போது 20 நபர்களும் அதனைத் தொடர்ந்து 4-வது வார இறுதியில் பிக்பாஸ் வீட்டிற்குள் 4 வைல்கார்ட் போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

அதன்படி தற்போது வீட்டில் 16 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் நடைப்பெற்ற டாஸ்கில் நிறைய மகிழ்ச்சியான கலகலப்பான நிகழ்வுகள் நடைப்பெற்றது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து சில சண்டைகள் நடைப்பெற்றாலும் ரசிகர்கள் நிகழ்ச்சியை பாராட்டவே செய்து இருந்தனர். இந்த நிலையில் இந்த வார எவிக்‌ஷன் ப்ராசசில் மொத்தம் 12 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். இதில் யார் வெளியேறுவார் என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ல் இன்று இவர்தான் வெளியேறுகிறார்:

அதன்படி கடந்த வாரம் மாஸ்க் படத்தின் புரமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகர் கவின் என்ட்ரி கொடுத்து இருந்தார். அவர் தான் நயன்தாரா உடன் இணைந்து ஹாய் என்ற படத்தில் நடித்து வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து அந்தப் படத்திற்கு நயன் மேமின் கால்சீட் கூட கிடைத்துவிட்டது ஆனால் கெமி கால்ஷீட் கிடைக்கவில்லை. சீக்கிரமா கெமிய வெளிய அனுப்பு வைங்க என்று கூறுவார்.

அதனை அவர் காமெடியாக கூறி இருந்தாலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் கெமி தான் எவிக்டாகி வெளியேறுகிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது. இது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… கொலவெறி பாடல் இப்படிதான் உருவானது… தனுஷ் ஓபன் டாக்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதாக வழக்கு தொடர்ந்த இளையராஜா – சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு