பிக்பாஸில் பார்வதியால் கடுப்பாகி டாஸ்கை விட்டு வெளியேறிய கனி… வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 46-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர் பார்வது மற்ற போட்டியாளர்கள் அனைவரிடமும் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டே இருக்கும் நிலையில் இன்று கனி உடன் சண்டையிடும் வீடியோ வெளியாகி உள்ளது.
சின்னத்திரையில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கிறது பிக்பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சியின் 9-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்கள் முடிவடைந்து 7-வது வாரம் சென்றுகொண்டிருக்கின்றது. இந்த வாரம் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் மூன்று அணிகளாக பிரிந்து போட்டிப்போட வேண்டும். அதில் எந்த அணி அதிக பாய்ண்ட்ஸ்களைப் பெற்று வெற்றி பெறுகிறதோ அந்த அணியில் உள்ள அனைவரும் அடுத்த வாரத்திற்கான கேப்டன் போட்டியில் கலந்துகொள்ள முடியும் என்று பிக்பாஸ் அறிவித்து இருந்தார். இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே பல நெகட்டிவான விமர்சனங்களை மட்டுமே பெற்று வந்தது. தொடர்ந்து வைல்க்டார்ட் போட்டியாளர்கள் உள்ளே சென்ற பிறகு ஆட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது.
தொடர்ந்து 5-வது வாரத்தில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம் ஏற்பட்டு பார்வையாளர்களிடையே இருந்து நெகட்டிவ் விமர்சனம் பெருவதை குறைத்துக்கொண்டது. கடந்த 6-வது வாரம் மற்றும் இந்த 7-வது வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகள் குறைந்து ஃபன் அதிகரித்து உள்ளது. மேலும் இந்த வாரம் தொடர்ந்து ஃபன் இருந்து வந்த நிலையில் அவ்வபோது அழுகை மற்றும் சண்டையும் வந்தது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸில் பார்வதியால் கடுப்பாகி டாஸ்கை விட்டு வெளியேறிய கனி:
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சிகான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் சாம்பார் டீமில் இருக்கும் பார்வதி அதே டீமில் இருந்த கனியை வம்புக்கு இழுக்கிறார். முதலில் கனியும் தொடர்ந்து பார்வதியிடம் பதில் பேசிக்கொண்டு இருந்த நிலையில் இறுதியில் அந்த அணியில் இருந்தே வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… அது நான் இல்லை… என் போன் நம்பரும் இல்லை – ஸ்ரேயா சரண் பெயரில் நடந்த மோசடி!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day46 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/YyW7OKvF9T
— Vijay Television (@vijaytelevision) November 20, 2025
Also Read… பிக்பாஸில் ஃபன் டாஸ்கில் கூட போட்டியாளர்கள் இடையே இவ்வளவு வன்மமா? வைரலாகும் வீடியோ



