இதுக்குமா சண்டை போடுவிங்க.. திவ்யா- வியானா இடையே தொடரும் பகை.. வைரலாகும் ப்ரோமோ!
Bigg Boss Tamil 9 Day 50: தமிழில் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபபராகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 9. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 50 நாட்களான நிலையில், இன்றைய எபிசோடில் திவ்யா கணேஷ் மற்றும் வியானவுடன் பிரச்சனை தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.
மக்களிடையே மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக்பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது தமிழ் மொழியை போலவே மாற்றமொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் (Bigg Boss Season 9 Tamil) தமிழில் ஆரம்பமானது. இந்த போட்டியில் ஆரம்பத்தில் 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், 3 வாரத்தில் 4 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். தற்போது 6 வரங்களை கடந்த நிலையில், மொத்தமாக இந்த நிகழ்ச்சியிலிருந்து 8 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். தற்போதுவரையிலும் வைல்ட் கார்ட் போட்டியாளர்களுடன் மொத்தமாக 16 போட்டியாளர்கள் இந்த பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.அந்த வகையில் இன்று இந்த வீட்டின் 7வது வார் நாமினேஷன் நடந்துள்ளது. இந்த வார் நாமினேஷனின் வி.ஜே.பார்வதி (VJ Parvathy), கனி திரு (Kani Thiru), பிரஜின் , சாண்டரா, ரம்யா ஜோ, FJ மற்றும் விக்கல் விக்ரம் போன்ற போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த் வாரத்தில் இதிலிருந்து ஒரு போட்டியாளர் வெளியேறுவரை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இன்று இஃபாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50வது நாளான நிலையில், வெளியான 3வது ப்ரோமோவில் திவ்யா கணேஷ் (Divya Ganesh) மற்றும் வியானாவிற்கு (Viyana) சர்க்கரை எடுப்பதில் பிரச்சனை தொடங்கியுள்ளது. இது தொடர்பான ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் லிஸ்டில் இருப்பவர்கள் யார் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
பிக்பாஸ் சீசன் 9 தமிழ் 50வது நாளில் வெளியான 3வது ப்ரோமோ வீடியோ பதிவு :
#Day50 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/nXoq6jqfd4
— Vijay Television (@vijaytelevision) November 24, 2025
இந்த ப்ரோமோ வீடியோவில், பிக்பாஸ் வீட்டில் சர்க்கரை எடுக்கும் அளவை பற்றி தொடர்பான வியானா, திவ்யா கணேஷை வம்பிற்கு இழுப்பது போல் இருக்கிறது. மேலும் அவர் ஒட்டுமொத்த குக்கிங் டீமையும் குறை சொலவதுபோல இடம்பெற்றுள்ளார். இதில் திவ்யா சர்க்கரை குறைவாக அனைவருக்கும் கொடுத்த நிலையில், அதிகளவு சர்க்கரை இருப்பதுபோல பயன்படுத்தாரீகள் என்று கூறுவதுபோல வியானா தெரிவிக்கிறார். மேலும் அடுத்தவாரத்தில் நல்ல குக்கின் டீமை போடுங்க என வியான கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் திவ்யா கணேஷ் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: சூர்யாவின் கருப்பு படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்ற பிரபல ஓடிடி நிறுவனம்
இது தொடர்பான ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த் வீடியோவின் கடைசியில் வியானா அழுவது போன்ற கடைசி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் சீசன் 9 தமிழ் 50வது நாளில் வெளியான 2வது ப்ரோமோ வீடியோ பதிவு :
#Day50 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/JpMyC9OB08
— Vijay Television (@vijaytelevision) November 24, 2025
இந்த பதிவில் கடந்த சீசன்களில் பங்குபெற்ற போட்டியாளர்கள் மற்றும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் சொந்தங்கள் அவர்களிடம் வீடியோ மூலம் பேசுவதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. கனி திரு, கம்ருதீன் மற்றும் FJ -வின் நண்பர்கள் அவரிடம் பேசுவது போன்று இந்த ப்ரோமோ வீடியோவில் உள்ளது.