பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் லிஸ்டில் இருப்பவர்கள் யார் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
BB9 Tamil 7th Week Nominations: தமிழில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றாக இருந்துவருவது பிக்பாஸ் சீசன் 9. இந்த நிகழ்ச்சி தொடங்கி 7 வாரங்களை கடந்த நிலையில், த்ற்போதுவரையிலும் ஒளிபரப்பாகிவருகிறது. இந்நிலையில் இந்த வாரத்தின் ஏவிக்ஷனுக்காக யாரெல்லாம் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது தொடர்பான .லிஸ்ட் குறித்து பார்க்கலாம்.
தமிழ் தனியார் தொலைக்காட்சியில் கடந்த 2017ம் முதல் ஒளிபரப்பப்பட்டுவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது ஒவ்வொரு ஆண்டுக்கும், ஒவ்வொரு சீசன் என்ற கணக்கில் ஒளிபறப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டில் வெளியாகிவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 9 தமிழ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுக்க கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கியிருந்தது. மற்ற சீசன்களை ஒப்பிடும்போது, இந்த பிக்பாஸ் சீசன் 9 மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியானது எதிர்க்கப்பட்ட நிலையில், தற்போது வித்தியாசமான டாஸ்குகளுடன் மிகவும் சுவாரஸ்யமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 6வது வாரமான நிலையில், நேற்று 2025 நவம்பர் 23ம் தேதியில் நடந்த எலிமினேஷனில் கெமி (Kemy) வெளியேறியிருந்தார். இந்த எலிமினேஷன் மிகவும் வித்தியாசமாக நடைபெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று 2025 நவம்பர் 24ம் தேதியுடன் இந்த பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி சரியாக 50 நாட்களாகிவிட்டது. அதைத் தொடர்ந்து 7வது வார ஏவிக்ஷன் பிராசஸ் (Eviation Process) இன்று நடந்த நிலையில், இதை யாரெல்லாம் எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறர்கள் என்பது குறித்து பார்க்கலாம்.




இதையும் படிங்க: மருமகளை ஏமாற்றிய முன்னாள் காதலன்… மாமியார் எடுத்த ரிவெஞ்ச் – ஓடிடியில் இந்த மந்தாகினி படத்தை மிஸ் செய்யாதீர்கள்
பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியில் 50வது நாளில் வெளியான முதல் ப்ரோமோ வீடியோ பதிவு :
#Day50 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/yfdlTvy2Yc
— Vijay Television (@vijaytelevision) November 24, 2025
பிக்பாஸ் வீட்டில் இந்தவார நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் போட்டியாளர்கள் :
இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 2025 நவம்பர் 24ம் தேதியுடன் சரியாக 50 நாட்கள் ஆகியுள்ளது. அதன்படி 7வது வாரத்தில் இந்த பிக்பாஸ் போட்டியாளர்களிடையே நடத்தப்பட்ட ஏவிக்ஷன் பிராசஸில், யார் யார் நாமினேட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்துப் பார்க்கலாம். இந்நிலையில் இதில் கனி திரு, பிரஜின், சாண்டரா, வி.ஜே.பார்வதி, திவ்யா கணேஷன், FJ, ரம்யா ஜோ மற்றும் விக்கல்ஸ் விக்ரம் உட்பட மொத்தமாக 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை மொத்தமாக 8 போட்டியாளர்கள் கிட்ட வெளியேறியிருக்கும் நிலையில், இந்த வாரத்தில் இந்தத் போட்டியாளர் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ரிவால்வர் ரீட்டா படத்தின் டேஞ்சர் மாமே பாடல்… ரிலீஸ் எப்போது தெரியுமா?
அதன்படி, இந்த 7வது வாரத்தில் ரம்யா ஜோ அல்லது கனி திரு வெளியேறுவதற்கு அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வாரத்தின் தல டாஸ்க்கும் இன்று நடைபெறும் நிலையில், அதில் யார் வெற்றி பெறுவார்கள் என்றும் இணையத்தில் பேசப்பட்டு வருகிற்து. மற்ற சீசன்களை ஒப்பிடும்போது, இந்த பிக்பாஸ் சீசன் 9 தமிழ் முற்றிலும் வித்தியாசமாகவே இருந்தது என்று கூறலாம். இந்த சீசனில் எதற்கு எடுத்தாலும் சண்டை என்ற நிலையில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.