Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அனுபமா பரமேசுவரனி லாக்டவுன் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

Lockdown Movie Official Trailer | தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பெண்களை மையப்படுத்தி வெளியாகும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை அனுபமா பரமேசுவரன். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள லாக்டவுன் படத்தின் ட்ரெய்லரை விஜய் சேதுபதி தற்போது வெளியிட்டுள்ளார்.

அனுபமா பரமேசுவரனி லாக்டவுன் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட விஜய் சேதுபதி!
அனுபமா பரமேசுவரன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Nov 2025 18:17 PM IST

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை அனுபமா பரமேசுவரன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து நடிகர் அனுபமா பரமேசுவரனின் நடிப்பில் இதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் 6 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இவரது நடிப்பில் வெளியான 6 படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகை அனுபமா பரமேசுவரன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பைசன் காளமாடன். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேசுவரன் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீப காலமாக நடிகை அனுபமா பரமேசுவரன் நாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு அதிக அளவில் முக்கியதுவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இதுவரை இந்த 2025-ம் ஆண்டில் நடிகை அனுபமா பரமேசுவரன் நடிப்பில் வெளியான 6 படங்களில் 2 படங்கள் நடிகை அனுபமா நாயகியை மையமாக வைத்து வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஆண்டே மூன்றாவதாகவும் நாயகியை மையமாக வைத்து வெளியாக உள்ள படத்தில்தான் நடிகை அனுபமா பரமேசுவரன் நடித்துள்ளார்.

அனுபமா பரமேசுவரனின் நடிப்பில் வெளியானது லாக்டவுன் பட ட்ரெய்லர்:

இந்தப் படம் லாக்டவுன் காலக்கட்டத்தில் நடைப்பெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. நடிகை அனுபமா பரமேசுவரன் முன்னணி வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை ஏஆர் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் அனுபமா பரமேசுவரன் உடன் இணைந்து பிரபலங்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வருகின்ற 5-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஏ.ஆர்.ரகுமானை அடிக்க வேண்டும் என்ற அளவிற்கு அவர் மீது கோபம் வந்தது – ராம் கோபால் வர்மா

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் சீரிஸ் ரசிகர்களால் முடங்கிய நெட்ஃபிளிக்ஸ்… என்ன நடந்தது?