Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

LIK: பட்டுமா.. பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்திலிருந்து வெளியான 2வது பாடல்!

Pattuma Song: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல இளம் நடிகராக இருந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் தமிழில் 4வது வெளியாக காத்திருக்கும் படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து பட்டுமா என்ற பாடல் வெளியாகியுள்ளது.

LIK: பட்டுமா.. பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்திலிருந்து வெளியான 2வது பாடல்!
பட்டுமா பாடல்
Barath Murugan
Barath Murugan | Published: 27 Nov 2025 19:42 PM IST

நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan)தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைந்து, தற்போது வளர்ந்துவரும் இளம் நடிகராக இருந்துவருகிறார்.இவரின் நடிப்பில் இதுவரை மொத்தம் 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த வெளியான 3 திரைப்படங்களும் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் 4-வதாக வெளியீட்டிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி (krihi Shetty) நடித்துள்ளார். இந்த படமானது எதிர்காலத்தில் நடைபெறும் ஒரு வித்தியாசமான காதல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்க, நயன்தாராவின் (Nayanthara) ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படமானது வரும் 2025 டிசம்பர் 18ம் தேதியில் வெளியாகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் 2வது பாடலான “பட்டுமா” (Pattuma) வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: அதெல்லாம் வாழ்க்கையில் ஒருமுறைதான் பண்ணமுடியும்… ஆண்ட்ரியா சொன்ன விஷயம்!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்திலிருந்து வெளியான பட்டுமா பாடல் தொடர்பான பதிவு :

இந்த 2வது பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இந்த பாடலில் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடனமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தின் “தீமா தீமா” என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு நிலையில், இந்த 2வது பாடலான “பட்டுமா” பாடலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது :

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டியுடன் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். அவர்கள், எஸ்.ஜே.சூர்யா, கௌரி ஜி கிஷன், சீமான், ஆனந்தராஜ், சுனில் ரெட்டி, யோகி பாபு ஷாரா போன்ற பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ரோபோவின் கதாபாத்திரத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கோலமாவு கோகிலா படமும் ரிவால்வர் ரீட்டா படமும் ஒன்னா? விளக்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!

இந்த படமானது கிட்டத்தட்ட 3 ஆண்டுகாலமாக தயாராகிவந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இரு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின் இந்த படம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இறுதியாக வரும் 2025 டிசம்பர் 18ம் தேதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல வரவேற்பை கொடுத்து ரூ 100 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.