AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பழைய தங்கத்தை மாற்றலாமா, விற்பனை செய்யலாமா?.. இரண்டில் எது பெஸ்ட்!

Selling Old Gold Vs Exchanging Old Gold | பழைய தங்கத்தை விற்பனை செய்வதா அல்லது அதற்கு பதிலாக புதிய தங்கத்தை வாங்குவதா என பலருக்கும் குழப்பம் இருக்கும். இந்த நிலையில், அவை இரண்டில் எது சிறந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பழைய தங்கத்தை மாற்றலாமா, விற்பனை செய்யலாமா?.. இரண்டில் எது பெஸ்ட்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Feb 2026 19:08 PM IST

இந்திய பாரம்பரியத்திலும், கலாச்சாரத்திலும் தங்கம் (Gold) முக்கிய அங்கம் வகிக்கிறது. பல தலைமுறைகளுக்கு முன்பிலிருந்தே மக்கள் தங்கத்தை வாங்கி சேமிக்க தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக பலரிடமும் பழைய தங்கம் இருக்கும். இந்த நிலையில், இந்த பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்கம் எடுப்பதா அல்லது பழைய தங்கத்தை விற்பனை செய்து பணமாக பெறுவதா, இரண்டில் எது லாபம் என பலருக்கு குழப்பம் இருக்கும். இந்த நிலையில், உண்னையிலே இரண்டில் எது சிறந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பழைய தங்கம் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்

நீங்கள் பழைய தங்கத்தை மாற்றவோ அல்லது விற்பனை செய்யவோ போகிறீர்கள் என்றால் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. அதுதான் தங்கத்தின் தரத்தை சோதனை செய்வது. நீங்கள் சமீப ஆண்டுகளில் தங்கம் வாங்கியுள்ளீர்கள் என்றால் அதில் ஹால்மார்க் முத்திரை இருக்கும். இதுவே பழைய தங்கத்தில் ஹால்மார்க் இருக்காது. இந்த நிலையில், நீங்கள் வைத்திருக்கும் தங்கத்தில் ஹால்மார்க் இருந்தால் அதனை அதிக விலை கொடுத்து வாங்கிக்கொள்வார்கள். ஒருவேளை ஹால்மார்க் இல்லை என்றால் சற்று குறைவான அளவே பணம் கொடுப்பார்கள்.

இதையும் படிங்க : SCSS : மாதம் தோறும் ரூ.17,000 வருமானம் பெறலாம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தல் திட்டம்!

பழைய தங்கத்தை மாற்றலாமா அல்லது விற்பனை செய்யலாமா?

தற்போதைய சூழலில் பழைய தங்கத்தை கொடுத்து பணமாக பெற விரும்பினால் உங்களுக்கு 20 சதவீதம் குறைவாகவே பணம் தருவார்கள். உதாரணமாக இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.14,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றால் நீங்கள் 10 கிராம் தங்கம் கொடுத்து பணமாக கேட்கும் பட்சத்தில் உங்களுக்கு ரூ.1.35 லட்சம் மட்டுமே கிடைக்கும். இதுவே நீங்கள் அந்த பழைய 10 கிராம் தங்கத்தை தங்கத்தை மாற்றி புதியதாக வாங்க நினைத்தால் உங்களுக்கு ரூ.1.45 லட்சம் மதிப்பிலான நகைகள் கிடைக்கும்.

இதையும் படிங்க : இனி ஆதார் பாதுகாப்பு குறித்த கவலை வேண்டாம்.. விரைவில் வர உள்ள அசத்தல் அம்சம்!

எனவே பழைய தங்கத்தை கொடுத்து பணத்தை வாங்குவதை விடவும், புதிய தங்கம் வாங்குவது சற்று லாபகரமானதாக உள்ளது. ஆனால், நீங்கள் புதிய தங்கத்தை வாங்கும்போது சேதாரம் குறைவாக உள்ள நகையை வாங்கும் பட்சத்தில் கூடுதலாக சேமிக்க முடியும்.

Follow Us