ஆதாரில் இத பண்ணலனா உங்கள் வங்கி கணக்கில் இருக்கு பணத்துக்கு சிக்கல்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
Do This In Your Aadhaar Card For Safety | இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆதாரமாக ஆதார் கார்டு உள்ளது. ஆதார் கார்டு இல்லை என்றால் பல சேவைகளை பெற முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில், ஆதார் கார்டில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடைமுறை ஒன்று உள்ளது.
இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் முதியோர் உதவித்தொகை பெறுவது வரை என அனைத்திற்கும் ஆதார் மிக முக்கிய ஆவணமாக கோரப்படுகிறது. பல இடங்களில் ஆதார் கார்டு நகல் அல்லது ஆதார் எண்ணை வழங்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில், ஆதார் கார்டில் இந்த ஒரு விஷயத்தை செய்யவில்லை என்றால் மிகப்பெரிய சிக்கலை சந்திக்க நேரிடும். அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆதார் மூலம் வங்கி கணக்கு கொள்ளையடிக்கப்பட வாய்ப்பு
ஆதார் கார்டை பான் கார்டு, வங்கி கணக்கு ஆகியவற்றுடன் இணைத்து வைத்துள்ளோம். இது சேவைகளை பெற மிகவும் எளிதானதாக இருக்கும் அதே வேலையில், மோசடிக்காரர்களுக்கு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க உதவும் எளிதான அம்சமுமாக உள்ளது. காரணம், ஆதார் கார்டில் ஒருவரின் பெயர், முகவரி, வயது, கைரேகை, கண்ரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் (Biometric) விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இதன் மூலம், வங்கி கணக்கில் இருக்கும் பணம் கொள்ளையடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆதாரில் இருக்கும் விவரங்களை லாக் செய்து வைப்பது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.
இதையும் படிங்க : இடைக்கால பட்ஜெட் 2026 – தூய்மை பணியாளர்களுக்கு 33,000 வீடுகள்… ஐடி பார்க்.. பட்ஜெட்டில் ஸ்பெஷல் அறிவிப்புகள் எவை?
அதார் விவரங்களை லாக் செய்வது எப்படி?
- அதற்கு முதலில் https://myaadhaar.uidai.gov.in என்ற இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- பிறகு 12 இலக்க ஆதார் எண், கேப்ட்சா மற்றும் ஓடிபி ஆகியவற்றை பதிவிட வேண்டும்.
- அங்கு கொடுக்கப்பட்டுள்ள Enable Biometric Login என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட இந்த சிம்பிள் ஸ்டெப்ஸ்களை பின்பற்றி மிக சுலபமாக உங்களது ஆதார் விவரங்களை லாக் செய்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : பிபிஎஃப் திட்டத்தில் ரூ.2,000, ரூ.3,000 மற்றும் ரூ.5,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
இவ்வாறு ஆதார் விவரங்களை லாக் செய்யும் பட்சத்தில் உங்களது அனுமதி இன்றி யாராலும் உங்களது ஆதார் கார்டை பயன்படுத்த முடியாது. இதன் மூலம் உங்கள் ஆதார் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்டு ஆவணங்கள் மற்றும் சேவைகள் பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.