பிபிஎஃப் திட்டத்தில் ரூ.2,000, ரூ.3,000 மற்றும் ரூ.5,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
Public Provident Fund Scheme Investment | அரசு அஞ்சலங்கள் மூலம் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், அதில் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் நிலையானம் பெற வேண்டும் என்பதால் அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு (Saving) மற்றும் முதலீட்டு (Investment) திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF – Public Provident Fund). இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், இந்த பிபிஎஃப் திட்டத்தில் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை முதலீடு செய்து லட்சக்கணக்கில் லாபம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
இந்த பிபிஎஃப் திட்டம் மொத்தம் 15 ஆண்டுகள் கால அளவீட்டை கொண்டுள்ள நிலையில், குறைந்த தொகையை முதலீடு செய்தாலும் அதிக லாபத்தை பெற முடியும்.
ரூ.2,000 முதலீடு
இந்த திட்டத்தில் நீங்கள் மாதம் ரூ.2,000 முதலீடு செய்கிறீர்கள் என்றால் ஆண்டுக்கு ரூ.24,000 சேமித்திருப்பீர்கள். இந்த நிலையில், 15 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.3.60 லட்சம் சேமித்திருப்பீர்கள். இந்த நிலையில், இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், திட்டத்தின் முதிர்வில் மொத்தமாக ரூ.6,50,913 கிடைக்கும். அதாவது வட்டியாக மட்டுமே ரூ.2.90 லட்சம் பெறுவீர்கள்.
இதையும் படிங்க : தங்கம், வெள்ளி ETFகளில் முதலீடு செய்துள்ளீர்களா?.. செபியின் இந்த அறிவிப்பை பாருங்க!
ரூ.3,000 முதலீடு
இந்த திட்டத்தில் நீங்கள் மாதம் ரூ.3,000 முதலீடு செய்கிறீர்கள் என்றால் ஒரு ஆண்டுக்கு ரூ.36,000 முதலீடு செய்திருப்பீர்கள். இதுவே 15 ஆண்டுகளுக்கு என்றால் மொத்தமாக ரூ.5.40 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். இந்த நிலையில் வட்டியுடன் சேர்த்து திட்டத்தின் முடிவில் ரூ.9,76,370 பெறுவீர்கள். அதாவது வட்டியாக மட்டுமே ரூ.4,36,370 பெறுவீர்கள்.
இதையும் படிங்க : இதுவரை இல்லாத அளவு அதிக அகவிலைப்படி.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. முக்கிய தகவல்!
ரூ.5,000 முதலீடு
இதுவே நீங்கள் இந்த பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்தால் ஒரு ஆண்டுக்கு ரூ.60,000 முதலீடு செய்திருப்பீர்கள். அதனை அப்படியே 15 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் மொத்தமாக ரூ.9 லட்சம் சேமித்திருப்பீர்கள். இந்த நிலையில், திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ.16,27,284 பெறுவீர்கள். அதாவது வட்டியாக மட்டுமே உங்களுக்கு ரூ.7,27,284 பெறுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.