Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எனக்கும் என் தம்பி கார்த்திக்குமான உறவு… நெகிழ்ந்து பேசிய சூர்யா

Actor Suriya: தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய சினிமா முழுவதும் வாரிசு நடிகர்கள் இருப்பது காலம் காலமாகவே இருந்து வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா மற்றும் கார்த்தி இருவம் அண்ணன் தம்பிகள் ஆவர்.

எனக்கும் என் தம்பி கார்த்திக்குமான உறவு… நெகிழ்ந்து பேசிய சூர்யா
கார்த்தி மற்றும் சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Jun 2025 06:30 AM

தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி என அனைத்து மொழி சினிமாவிலும் வாரிசு நடிகர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. சினிமாவில் தனது தந்தையோ அல்லது தாயோ அல்லது குடும்பத்தில் இருக்கும் யாரோ ஒருவர் பெரிய இடத்தில் இருந்தார் அவர்களின் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் வாரிசுகளுக்கும் சினிமாவில் வாய்ப்பு என்பது எளிதாகக் கிடைக்ககூடிய ஒன்றாகவே உள்ளது. ஆனால் வாரிசு நடிகர்கள் என்பதற்காகவே தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அவர்களை கொண்டாடுவது இல்லை. அவர்களின் நடிப்பும் வேலையும் மக்களுக்கு பிடித்தால் மட்டுமே அவர்கள் கொண்டாப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி வாரிசு நடிகர்களாக வந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள்தான் நடிகர்கள் சூர்யா (Actor Suriya) மற்றும் கார்த்தி (Actor Karthi).

பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் மகன்கள் சூர்யா – கார்த்தி:

தமிழ் சினிமாவில் 70-களில் தொடங்கி நடிகராக இருந்தவர் நடிகர் சிவக்குமார். இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி பல குணச்சித்திர வேடங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். முன்னதாக வரும் சாமிப் படங்களில் கடவுள் வேடங்கள் ஏற்றும் இவர் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கும் 3 பிள்ளைகள் உள்ளனர். இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் பிள்ளை உள்ளது. இதில் ஆண் பிள்ளைகளான சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களின் பட்டியளில் உள்ளனர். வருடத்திற்கு இரண்டு படங்களிலாவது இவர்கள் நடிப்பது தற்போது வலக்கத்தில் உள்ளது.

முன்னணி நடிகர்களாக வலம் வரும் சூர்யா – கார்த்தி:

தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகின்றனர் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. தனது தந்தையின் பெயரால் நடிகர் சூர்யாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. ஆனால் தற்போது சூர்யா உச்ச நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்து இருப்பதற்கு காரணம் அவரது உழைப்பு மட்டுமே காரணமாகம்.

அதே மாதி நடிகரின் மகன், நடிகரின் தம்பி என்ற அடையாளத்துடன் சினிமாவில் நாயகனாக நடித்த கார்த்தி தனது உழைப்பின் காரணமாக தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி குறித்து நெகிழ்ந்து பேசிய சூர்யா:

முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய சூர்யா சிறு வயதில் தனது தம்பி உடனான உறவு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் ஒரு 10 வயது வரைக்கும் நான் எப்பவும் கார்த்திய அழ வச்சுட்டே இருப்பேன். ஆனா அவன் என் பின்னாடியே சுத்திட்டு இருப்பான். நான் அவன கண்டுகவே மாட்டேன்.

அப்போ ஒரு நாள் நாங்க ஏரியால ஃப்ரண்ட்ஸ் எல்லாம் சைக்கில் ஓட்டிட்டு ஸ்டண்ட் பன்னிட்டு இருந்தோம். ஆனா கார்த்திய சேத்துகல விளையாட்டுல ஆனாலும் அவன் எங்க பின்னாடியே நாங்க பன்றதையே திரும்ப பன்னிட்டு இருந்தான். அப்போ ஒரு கடையில போது மோதிட்டான் அந்த கடக்காரர் கார்த்திய பிடிச்சு திட்ட ஆரம்பிச்சுட்டாரு நான் வேடிக்கதான் பாத்துட்டு இருந்தேன்.

நடிகர் கார்த்தியின் இன்ஸ்டா பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

ஆனா என்னோட ஃப்ரண்ட் கார்த்திகாக அந்த கடக்காரர்கிட்ட சண்டைக்கு போயிட்டான். அப்போ அந்த கடக்காரர் நீ யாருடா கேக்க என்றதும் அவன் என் தம்பி நான் தான் கேப்பேன் என்று என் ஃப்ரண்ட் சொன்னான். அப்போ எனக்கு சுருக்குனு இருந்துச்சு என் தம்பிக்கு நான் தான பேசி இருக்கனும். ஒரு அண்ணனா இத பன்னலனு வருத்தப்பட்டேன்.

அப்பறம் கார்த்தி படிப்புக்காக வெளிநாடு சென்றதும் நான் அவன அதிகமா மிஸ் பன்ன ஆரம்பிச்சேன். அப்பறம் அவன பத்தி கவல படுறத தெரிஞ்ச கார்த்தி எனக்கு ஒரு மெயில் பன்னான். அதப் பார்த்ததும் நான் அழுதுவிட்டேன் என்று மிகவும் நெகிழ்ச்சியாக சூர்யா அந்தப் பேட்டியில் பேசியிருப்பார்.