Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்தப் படங்கள்

Director Lokesh Kanagaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படத்தின் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது இயக்கத்தில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற் படங்கள் என்ன என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்தப் படங்கள்
லோகேஷ் கனகராஜ்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Jun 2025 20:02 PM

கைதி: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) இயக்கத்தில் 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கைதி. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியன் மற்றும் தீனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருதனர். இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடிகர் சூர்யா கேமியோ செய்திருப்பார். ரோலெக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து இருந்த நிலையில் அந்தக் கதாப்பாத்திரத்திற்கு தனி ஒரு படம் எடுக்க உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முன்னதாக தெரிவித்து இருந்தார். மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முதல் பாகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு, திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் பணியில் இரவு காட்சிகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 13-ம் தேதி ஜனவரி மாதம் 2021-ம் ஆண்டு திரையரங்களில் வெளியான படம் மாஸ்டர். இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருந்த நிலையில் நடிகர்கள் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரேமியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்யராஜ் மற்றும் கௌரி ஜி. கிஷன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற்து. மேலும் படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விக்ரம்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் விக்ரம். இந்தப் படத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நாயகனாக நடித்து இருந்தார். கமல் ஹாசனின் ஃபேன் பாயாக அவருக்கு சிறந்த ஹிட் படத்தை கொடுத்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, செம்பன் வினோத் ஜோஸ், சந்தான பாரதி மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். மேலும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சின் 2-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.