Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

கமல் ஹாசன் நடிப்பில் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய படங்கள்!

Ulaga Nayagan Kamal Haasan: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் இன்று தக் லைஃப் படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் முன்னதாக வெளியான சிறந்த படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

கமல் ஹாசன் நடிப்பில் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய படங்கள்!
கமல் ஹாசன்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 05 Jun 2025 19:33 PM

நாயகன்: நடிகர் கமல் ஹாசன் (Actor Kamal Haasan) நடிப்பில் கடந்த 1987-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் நாயகன். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் நாயகியாக நடித்து இருந்தார். இவர் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார். மும்பையில் தாதாவாக விளங்கிய வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இதில் நடிகர் கமல் ஹாசன் வரதராஜன் முதலியார் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் பிறை: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி 1982-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மூன்றாம் பிறை. இந்தப் படத்தை இயக்குநர் பாலு மகேந்திரா எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீ தேவி நாயகியாக நடித்து இருதார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், சில்க் ஸ்மிதா மற்றும் பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார். படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக கண்ணே கலைமானே பாடல் இன்றும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அபூர்வ ராகங்கள்: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அபூர்வ ராகங்கள். இந்தப் படத்தை இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிகர்கள் சுந்தர்ராஜன் , ஸ்ரீவித்யா மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடித்துள்ளனர் , அதே நேரத்தில் நாகேஷ் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மகாநதி: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1994-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மகாநதி. இந்தப் படத்தை இயக்குநர் சந்தான பாரதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நடிகரக்ள் சுகன்யா, கொச்சி ஹனீஃபா, எஸ்.என்.லட்சுமி, சோபனா விக்னேஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார். படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!...