அஜய் ஞானமுத்துவுடன் புது படத்தில் கைகோர்க்கும் ராகவா லாரன்ஸ்?
Raghava Lawrence New Movie: தமிழ் மக்களின் மத்தியில் மிகவும் பிரபால்மான் நாயகனாக இருந்துவருபவர் ராகவா லாரன்ஸ். இவரின் நடிப்பிலும், இயக்கத்திலும் பல படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில், இவர் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. அதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.
கோலிவுட் மக்கள் மத்தியில் ஒரு சமூக சேவகனாகவும், நடிகராகவும் மிகவும் பிரபலமானவர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence). இவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் போன்ற பணிகளையும் சினிமாவில் செய்துவருகிறார். மேலும் இவர் சமூக சேவராகவும் பணியாற்றிவருகிறார். தனது வருமானத்தின் கீழ் கிட்டத்தட்ட 60 குழந்தைகளுக்கும் மேல் அவர் வளர்த்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda Double X). இப்படத்தின் வெளியீட்டிற்கு பின் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) தயாரிப்பில் பென்ஸ் (Benz) என்ற படத்தில் இணைந்து நடித்துவந்தார்.
இப்படத்தின் ஷூட்டிங்கை ராகவா லாரன்ஸ் முடித்த நிலையில், தனது அடுத்தப்படத்திற்கான பணிகளையும் தொடங்கியுள்ளார். அவர் தற்போது காஞ்சனா 4 (Kanchana 4) படத்தை இயக்கி நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இதையடுத்து புதிய இயக்குநருடன் படத்தில் இணைகிறாராம். அது வேறுயாருமில்லை இயக்குநர் அஜய் ஞானமுத்துதான் (Ajay Gnanamuthu).




இதையும் படிங்க: காஞ்சனா 4 படத்தில் நடிக்க பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை? வைரலாகும் தகவல்
ராகவா லாரன்ஸ் மற்றும் அஜய் ஞானமுத்து கூட்டணி:
நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து ஹாரர் மற்றும் காமெடி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் நடிப்பில் வெளியாகிவரும் ஹாரர் படங்கள் எல்லாமே இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் காஞ்சனா 4 படத்தை இவர் இயக்கவுள்ளாராம். இப்படத்தை அடுத்ததாக இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்திலும் புதிய படத்தில் இணைவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? ரசிகருக்கு பதில் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்!
இயக்குநர் அஜய் ஞானமுத்து டிமாண்டி காலனி பட தொகுப்பை இயக்கி மிகவும் பிரபலமானவர். இவரின் இயக்கத்தில் ஹாரர் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக கூப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஜய் ஞானமுத்து மற்றும் ராகவா லாரன்ஸ் கூட்டணி படம் குறித்து வைரலாகும் பதிவு:
A film directed by #AjayGnanamuthu and starring #RaghavaLawrence is being planned. There is a high possibility that Raghava Lawrence will produce this film. pic.twitter.com/N4u1DQpm1d
— Movie Tamil (@_MovieTamil) June 13, 2026
ராகவா லாரன்ஸ் நடிப்பில் பென்ஸ் படமானது சிறப்பாக தயாராகிவரும் நிலையில், இதில் நிவின் பாலி, ரவி மோகன் மற்றும் சம்யுக்தா மேனன் போன்ற பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படமானது 2026ம் ஆண்டிற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என கூறப்படுகிறது.