வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடி எடுத்து வைக்கும் நூறு சாமி படம் – மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படக்குழு
Nooru Saami Movie Successfully Enters Third Week | தமிழ் சினிமாவில் கடந்த ஜூன் மாதம் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான நூறூ சாமி படம் தற்போது வெற்றிகரமாக 3-வது வாரத்தில் அடி எடுத்து வைத்தது தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவை பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளாக சில கட்டமைப்புகள் தொடர்ந்து உடைக்கப்பட்டு வருகின்றது. முன்பு எல்லாம் சினிமாவில் ஒருவர் என்னவாக அறிமுகம் ஆகிறாரோ அவர் இறுதி வரை அந்த விசயத்தை மட்டுமே சினிமாவில் செய்துவிட்டு செல்ல வேண்டிய சூழல் இருந்தது. அதில் அத்தி பூத்தார் போல என்று கூறுவதற்கு ஏற்றார் போல ஒரு சிலர் மட்டுமே மற்ற துறைகளிலும் கால்களை பதித்து இருந்தனர். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அந்த கட்டமைப்புகள் அனைத்தையும் தகர்த்து எரிந்து யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சினிமாவில் செய்யலாம். அதற்கு போது மான திறமை மட்டும் இருந்தால் போதும் என்பதே தற்பொதைய நிலையாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சினிமவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 19-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நூறு சாமி.




மூன்றாவது வாரத்தில் காலடிபதிக்கும் நூறு சாமி படம்:
அதன்படி இயக்குநர் சசி எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடிகர்கள் ஸ்வாசிகா, அஜய் திஷான் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் மூன்றாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read… Jailer 2: டைகர் முத்துவேல் பாண்டியன் வரார்.. ஜெயிலர் 2 பட ரிலீஸ் எப்போது தெரியுமா?
நூறு சாமி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A blockbuster powered by your love. ❤️ #Noorusami continues its successful run into the 3rd Week!#NoorusamiInCinemasNow
Booking 🔗 https://t.co/UwHvTWNb0Z
A #FamilyBiopic.@vijayantony #Sasi @vijayantonyfilm #Swasika @AJDhishan990 @karunaasethu @jose_lijomol pic.twitter.com/cuyaiG1nqN
— VijayAntonyFilmCorporation (@vijayantonyfilm) July 3, 2026
Also Read… Kriti Sanon: நடிகைகளை கண்ணியமாக பாருங்க… இது கேவலமாக இல்லையா? – கிரிதி சனோன்!