உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகும் அடுத்தப் படம்- அப்டேட் இதோ
Umapathy Ramaiah: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், வில்லன் என பல கதாப்பாத்திரங்களை ஏற்ற நடிகர் ராமையா. இவரது மகன் தான் நடிகர் உமாபதி ராமையா. இவர் நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடிகராக வலம் வந்தவர் தம்பி ராமையா (Umapathy Ramaiah). இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது மகன் உமாபதி ராமையா நாயகனாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி வெளியான அதாகப்பட்ட மகாஜனங்களே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மனியார் குடும்பம், திருமணம் மற்றும் தண்ணி வண்டி ஆகியப் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து நாயகனாக நடித்து வந்த நடிகர் உமாபதி ராமையான கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ராஜாகிளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார்.
இந்தப் படத்திற்கு இவரது தந்தை தம்பி ராமையா திரைக்கதை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. வித்யாசமான கதைக்களத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனை காதல் திருமணம் செய்துக்கொண்டார். மேலும் உமாபதி ராமையா அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உமாபதி ராமையா கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு பிடித்தமான போட்டியாளராக உமாபதி ராமையா இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இவர் பெரிய பட்ஜெட்டில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இயக்குநராக மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கண்ணா ரவி படத்தை இயக்கும் உமாபதி ராமையா:
அதன்படி உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாக உள்ள இரண்டாவது படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் தயாரிப்பு எண் – 6 இல் இயக்குனர் உமாபதி ராமையாவை வரவேற்கிறோம். ஒரு துணிச்சலான புதிய அத்தியாயத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் கண்ணா ரவி உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… கட்டிப்புடி கட்டிப்புடி டா பாடல் இப்படிதான் உருவாச்சு – எஸ்.ஜே.சூர்யா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Welcoming Director @umapathyramaiah onboard 🙌 for Production No – 6 Steering us into a bold new chapter ✨@KRGOffl @Gantaarastudios@ProRekha #KannanRaviGroups #GantaaraStudios #KannanRavi #DeepakRavi pic.twitter.com/6GbWIX4bMq
— Gantaraa_Studios (@Gantaraastudios) September 22, 2025
Also Read… குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியின் ஃபனலிஸ்ட் இவர்கள் தான் – வெற்றி பெறப்போவது யார்?