தியேட்டர்ல பாக்கலையா டோண்ட் ஒரி… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது தாய் கிழவி படக்குழு
Radhika Sarathkumars Thaai Kizhavi Movie OTT Update : தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் தாய் கிழவி. இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் தாய் கிழவி. இந்தப் படத்தை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி இருந்தார். ரூரல் காமெடியை மையமாக வைத்து உருவாகி இருந்த இந்தப் படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடெக்ஷன்ஸ் சார்பாக தயாரித்து இருந்தார். இந்தப் படம் சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும் வசூலில் 150 கோடு ரூபாய் வரை வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் ஸ்வாக் பாட்டியாக நடித்து இருந்த நிலையில் அவருக்கு அந்த ஊரில் உள்ள அனைவரும் பயப்படுவது போல காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. கிராமத்து கதைகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைப்பது போல இந்தப் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.




ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது தாய் கிழவி படக்குழு:
27-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான தாய் கிழவி படத்தை தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி படம் வருகின்ற 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… கோடிக்கணக்கான மக்களுக்கு ராமர் ஒரு வழிகாட்டும் சக்தியாக இருந்து வருகிறார் – ரன்பீர் கபூர்
தாய் கிழவி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Thaaikizhavi Jiohotstar la vasool panna vanthukirukka 🔥🥳#ThaaiKizhavi streaming from April 10 only on #JioHotstar #ThaaiKizhaviOnJioHotstar #ThaaiKizhaviStreamingFromApril10 #JioHotstarTamil @Siva_Kartikeyan @Sudhans2017 @KalaiArasu_ @SKProdOffl @PassionStudios_… pic.twitter.com/TQq7zwkduc
— JioHotstar Tamil (@JioHotstartam) March 31, 2026
Also Read… நடிகை ரோஜாவின் பிரம்மாண்ட வீடு.. குக் வித் கோமாளி 7 சீசன் குழு வெளியிட்ட வீடியோ!