AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோர்ட் ரூம் ட்ராமாவாக தமிழில் மிஸ் செய்யக்கூடாத இணையதள தொடர்… சரவணனின் நடிப்பில் சட்டமும் நீதியும் தொடரை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

Sattamum Neethiyum Courtroom Drama Web Series : தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த இணையதள தொடர் சட்டமும் நீதியும். இந்த இணையதள தொடரை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கோர்ட் ரூம் ட்ராமாவாக தமிழில் மிஸ் செய்யக்கூடாத இணையதள தொடர்… சரவணனின் நடிப்பில் சட்டமும் நீதியும் தொடரை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
சட்டமும் நீதியும்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Mar 2026 21:44 PM IST

இந்திய சினிமாவில் இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடையே எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ அதே போல கோர்ட் ரூம் ட்ராமாவிற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கோர்ட் ரூம் ட்ராமா பாணியில் வெளியான இணையதள தொடர்தான் சட்டமும் நீதியும். இந்த இணையதள தொடரை இயக்குநர் சூர்ய பிரதாப் எஸ் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்த இணையதள தொடர் கடந்த ஜூலை மாதம் 18-ம் தேதி 2025-ம் ஆண்டு ஓடிடியில் வெளியானது. அதன்படி இணையத்தில் இந்த சட்டமும் நீதியும் தொடர் வெளியான போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் நடிகர் சரவணன் கதையின் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

அதன்படி இந்த தொடரில் நடிகர்கள் நம்ரிதா எம்.வி., அருள் டி. சங்கர், சண்முகம், இனியா ராம், மகாதேவ் பையக்கல், திருசெல்வம், விஜயஸ்ரீ, தனிஷ்தன், நிஷாந்த், சேலம் புகழேந்தி, ஆர்யன், தேவா, ஜெயஸ்ரீ பினுராஜ், சாய் வர்ஷா சீதாராமன், கோகுல் எஸ் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்த தொடர் ஜீ 5 ஓடிடியில் நேரடியாக வெளியான நிலையில் தற்போது அந்த ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

சட்டமும் நீதியும் இணையதள தொடர் எப்படி இருக்கு?

நடிகர் சரவணன் இந்த இணையதள தொடரில் ஒரு ரோட்டரி வழக்கறிஞராக இருக்குறார். இவர் வழக்கறிஞராக பணியைத் தொடங்கிய போது ஒரு நிரபராதிக்கு தண்டனை கிடைக்கிறது. அந்த நபர் தற்கொலை செய்துக்கொண்டதால் அதனைத் தொடர்ந்து வழக்குகளை வாதிடுவதை தவிர்த்துவிட்டு ரோட்டரி வழக்கறிஞராக இருக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் தனது மகனே தன்னை மதிக்கவில்லை என்பதை தெரிந்துகொண்ட பிறகு வழக்கை வாதாட முடிவு செய்கிறார்.

Also Read… இது இளைஞர்களின் வெற்றி… வசூலில் கெத்து காட்டும் கென் கருணாஸின் யூத் படம்

அப்படி இருக்கும் சூழலில் ஒரு நபர் தனது மகள் காணவில்லை என்றும் அது தொடர்பான வழக்கை காவல்துறையினர் எடுக்கவில்லை என்று கூறி நீதிமன்ற வழாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொள்கிறார். அந்த தற்கொலை செய்துக்கொண்ட நபருக்காக ஒரு பொதுநல வழக்கை சரவணன் தொடர்கிறார். அவரின் சட்ட அறிவைப் பார்த்து அவருக்கு ஜூனியராக நடிகை நம்ரிதா எம்.வி இணைந்து பணியாற்றுகிறார்.

மொத்தம் 7 எபிசோடுகளை கொண்ட இந்த தொடரில் பல ட்விஸ்ட்டுகள் நிறைந்து இருக்கிறது. இது அணைத்தையும் இயக்குநர் மிகவும் சிறப்பாக காட்டியிருந்தார். விறுவிறுப்பாக செல்லும் இந்த தொடரை நீங்கள் தற்போது ஜீ 5 ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… இன்று மாலை வெளியாகிறது LIK படத்திலிருந்து அடாவடி பாடல்

Follow Us