இன்று மாலை வெளியாகிறது LIK படத்திலிருந்து அடாவடி பாடல்
Adaavadi Song From Love Insurance Kompany Movie Out Today: தமிழ் சினிமா ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்த படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தில் இருந்து இன்று மாலை மூன்றாவது பாடல் வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் திரையரங்குகளில் வெளியாகாமல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம். இந்தப் படத்தில் நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இருந்தார். லவ் டுடே படத்திற்கு பிறகு இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் தான் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இருந்தார். ஆனால் இந்தப் படம் வெளியவதற்கு முன்னதாக இந்தப் படத்தினை தொடர்ந்து உருவான டிராகன் மற்றும் டியூட் என இரண்டு படங்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் உடன் நடிகை கிருத்தி ஷெட்டி நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தொடர்ந்து படம் வெளியீட்டில் தள்ளிப்போய்க்கொண்டே இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்களும் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திலிருந்து வெளியாகும் அடாவடி பாடல்:
அதன்படி படம் வருகின்ற 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் இருந்து மூன்றாவது பாடலை இன்று 30-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி அடாவடி என்ற பாடல் இன்று மாலை வெளியாகிறது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Also Read… Sasi: மீண்டும் ஒரு அம்மா மகன் கதை.. ஆனால் நூறு சாமி படம் உங்களை ஆச்சரியப்படுத்தும் – இயக்குநர் சசி!
லவ் இன்சூரன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Third punch from #LIK – it’s a knock out di 🔥#LIKFromApril10 #LIK #LoveInsuranceKompany
An @anirudhofficial musical 🎵
A #Wikki original@pradeeponelife #VigneshShivan @anirudhofficial @IamKrithiShetty@iam_SJSuryah #RaviVarman @iYogiBabu @Gourayy… pic.twitter.com/qyNa650gbT
— Seven Screen Studio (@7screenstudio) March 30, 2026
Also Read… விஜய் சார் படம் ரிலீஸாகுதுனா எங்க படத்தை திட்டமிடமாட்டோம் – நடிகர் பரத்