ஒரு ஆண்டை நிறைவு செய்தது வீர தீர சூரன்… கொண்டாடும் ரசிகர்கள்
One Year Of Veera Dheera Sooran Part 2 Movie: தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் வீர தீர சூரன் பாகம் 2. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெறும் படங்களை இயக்கி பிரபலம் ஆனவர் இயக்குநர் எஸ்.யூ. அருண் குமார். தொடர்ந்து இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த 27-ம் தேதி மார்ச் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் வீர தீர சூரன் பாகம் இரண்டு. முதல் பாகம் வெளியாவதற்கு முன்னதாகவே இரண்டாம் பாகத்தை வெளியிட்டது படக்குழு. இதுவே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்களிடையே அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் ஓர் ஆண்டை நிறைவு செய்ததைப் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் படத்தில் நடிகர் சியான் விக்ரம் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை துஷாரா விஜயன் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு இது தமிழில் அவர் அறிமுகமான முதல் படம், பிருத்விராஜ், பாலாஜி, ரமேஷ் இந்திரா, பார்வதி திருவிக்ரம் என பலர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஒரு ஆண்டை நிறைவு செய்தது வீர தீர சூரன்:
ஊரில் மளிகை கடை நடத்தி வரும் விக்ரம் தனது மனைவி துஷாரா விஜயன் மற்றும் இரண்டு குழந்தைகள் உடன் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவரது நிகழ்கால வாழ்க்கை இப்படி இருந்தாலும் முந்தைய வாழ்க்கை இப்படி அமைதியானதாக இல்லை. அவர் முன்பு செய்த பல காரியங்களின் பலனாக தற்போது அவரது வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது.




Also Read… பா.ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படம் எப்போது ரிலீஸ் ஆகிறது? வைரலாகும் தகவல்
தொடர்ந்து யார் யாருக்காகவோ அடியால் வேலை பார்த்து வந்த விக்ரம் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மீண்டும் வன்முறையை தேர்வு செய்கிறார். அதன்பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படம் இன்றுடன் திரையரங்குகளில் வெளியாகி ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.