AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kiara Advani: அந்த கேரக்டர் ரொம்பவே ஆச்சர்யப்படவைத்தது.. டாக்ஸிக் படம் பற்றி கியாரா அத்வானி பேச்சு!

Kiara Advani About Toxic Movie: பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் கியாரா அத்வானி. இவர் நடிகர் யாஷின் டாக்ஸிக் படத்தில் லீட் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், அவரின் கதாபாத்திரம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 30 Mar 2026 20:59 PM IST
இந்தி சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் கியாரா அத்வானி. இவர் வெறும் பாலிவுட் படங்களில் மட்டும் நடிக்காமல், தெலுங்கு மொழியிலும் படத்தில் நடித்துவருகிறார். அந்த விதத்தில் இவர் இறுதியாக கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

1 / 5
அந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நிலையில், இதற்கு பின் அவர் கர்ப்பமாக இருந்த நிலையில், தனது குழந்தைக்காக சினிமாவிலிருந்து சிறிதுகாலம் விலகியிருக்கிறார். கேம் சேஞ்சர் படத்துடன் இவர் நடித்துவந்த பான் இந்திய படம்தான் டாக்ஸிக். இதில் இவர் நாடியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 / 5
பெண் இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க, யாஷ் தயாரித்து நடித்துள்ள படம்தான் டாக்ஸிக். இந்த் படத்தில் பெண் கதாபாத்திரங்கள் அதிகம் இடம்பெற்றுள்ள நிலையில், இதில் லீட் கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இவர் இதில் ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது.

3 / 5
யாஷின் டாக்சிக் படமானது இந்த 2026 மார்ச் மாதத்தில் வெளியாகவிருந்த நிலையில், தற்போது ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் சமீபத்தில் நேரக்கனல் ஒன்றில் பேசியிருந்த நடிகை கியாரா அத்வானி, டாக்ஸிக் படத்தில் தான் நடித்துள்ள நாடியா கதாபாத்திரம் பற்றி சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

4 / 5
அதில் நடிகை கியார அத்வானி பேசுகையில், நான் படித்திருந்த ஸ்கிரிப்டுகளிலே, நாடியா கதாபாத்திரம் மிகவும் தனித்துவமான ஒரு கதாபாத்திரப் பயணம் என்று நினைக்கிறேன். என் இயக்குநர் கீது இந்த கதாபாத்திரத்தை எழுதிய விதமும், அதற்கு அவர் கொடுத்திருக்கும் பயணமும் என்னை மிகவும் கவர்ந்தது. மேலும் இந்த படத்திற்காக காத்திருக்கிறேன் என அதில் தெரிவித்திருந்தார்.

5 / 5
Follow Us