பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட்கார்ட் போட்டியாளராக நுழைந்த திவ்யா கணேஷ் – வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 9 : பிக்பாஸ் நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் வைல்ட் கார்ட் போட்டியாளராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் நடிகை என்ட்ரி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு சீசனிலும் நிகழ்ச்சி தொடங்கும் போது குறிப்பிட்ட அளவிளான போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள். தொடர்ந்து இவர்கள் போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் போது சிறிது நாட்களுக்குப் பிறகு வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் சிலரை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்புவார்கள். வைல்காட்ர் போட்டியாளர்களாக உள்ளே செல்பவர்கள் முன்னதாகவே வெளியில் இருந்து போட்டியாளர்களின் ஆட்டத்தை பார்த்துவிட்டு செல்வதால் ஒரு புரிதலோடு விளையாட உதவியாக இருக்கும். இப்படி ஒவ்வொரு சீசன்களிலும் வைல்ட்கார்ட் போட்டியாளர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு இருக்கும். இவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு தொடர்ந்து அத்தனை நாட்களாக இருந்த ஆட்டம் மாறி வேறு மாதிரியாக மாற அதிக வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss tamil Season 9) நிகழ்ச்சியில் கடந்த வார இறுதியிலேயே வைல்ட்கார்ட் போட்டியாளர் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வார இறுதியில் இல்லாமல் இந்த 4-வது வாரத்தின் நடுவிலேயே பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்கார்ட் போட்டியாளர் உள்ளே செல்கிறார். இது தொடர்பான வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த சீசனில் முதல் வைல்க்டார்ட் போட்டியாளராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை திவ்யா கணேஷ் தான் செல்கிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த திவ்யா கணேஷ்:
பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை திவ்யா கணேஷ். பாக்கியலட்சுமி சீரியலில் இவர் நாயகியாக இல்லாமல் நாயகியின் மருமகளாக நடித்து இருந்தாலும் இவரின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த சீரியல் முடிவடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை திவ்யா கணேஷ்.
இதுகுறித்து பிக்பாஸ் நிகழ்ச்சி குழு அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் திவ்யா கணேஷ் தான் நேர்பட பேசக்கூடிய ஆள் என்றும் தனக்கு ஒரே முகம் மட்டுமே உள்ளது என்றும் அதனைதான் பிக்பாஸில் காட்ட உள்ளதகாவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ப்ரோ கோட் பெயரைப் பயன்படுத்த ரவி மோகனுக்கு தடை – டெல்லி உயர் நீதிமன்றம்
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#பிக்பாஸ் இல்லத்தில்.. #DivyaGanesh 😍விரைவில்..
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV… pic.twitter.com/n6qCUIlnDG
— Vijay Television (@vijaytelevision) October 28, 2025
Also Read… வாய் பேச முடியாத ரசிகரின் வேண்டுகோள்.. சிரித்தபடி செய்துகொடுத்த அஜித்.. வைரல் வீடியோ



