AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Samuthirakani: யாரை பழிவாங்க இதை செய்கிறார்?.. இருந்ததும் போச்சி – விஜய்யை கடுமையாக சாடிய சமுத்திரக்கனி!

Samuthirakani Fiery Criticism About Vijay: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து முக்கிய வேடங்களில் நடித்துவருபவர் நடிகர் சமுத்திரக்கனி. இவர் சமீபத்தில் டெக்ஸ்லா பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு முன், அவர் விஜய் குறித்து கடுமையாக பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவிவருகிறது.

Samuthirakani: யாரை பழிவாங்க இதை செய்கிறார்?.. இருந்ததும் போச்சி – விஜய்யை கடுமையாக சாடிய சமுத்திரக்கனி!
விஜய் மற்றும் சமுத்திரக்கனிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 08 Mar 2026 19:12 PM IST

தென்னிந்திய சினிமாவில் படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்து அசத்திவருபவர் சமுத்திரக்கனி (Samuthirakani). இவர் தமிழ் சினிமாவையும் கடந்து, தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். மேலும் இறுதியாக இவரின் நடிப்பில் காந்தா (Kanthaa) என்ற படமானது வெளியானது. அதில் இவரின் நடிப்பும் சிறப்பாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், “கார்மேனி செல்வம்” (Carmeni Selvam) என்ற திரைப்படமானது தயாராகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் ராம் சக்ரி (Ram Chakri) இயக்கியுள்ள நிலையில், வரும் 2026 ஏப்ரல் 3ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தற்போது தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) விவாகரத்து குறித்த சர்ச்சை தமிழ் மக்கள் மத்தியில் பரப்பலாக பேசப்பட்டுவருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் டெக்ஸ்லா பட நிகழ்ச்சியில் நடிகர் சமுத்திரக்கனி கலந்துகொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு முன், இயக்குநர் பாலா மற்றும் தனது நண்பர்களுடன் பேசியபோது விஜய் குறித்து கடுமையாக பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: குந்தவையை கொஞ்சநாள் வீட்டிலே குந்தவைக்கிறது நல்லது – திரிஷா குறித்து பார்த்திபன் பரபரப்பு பேச்சு!

விஜய் குறித்து நடிகர் சமுத்திரக்கனி பேசிய விஷயம் :

இயக்குநர் பாலா மற்றும் தனது நண்பர்களுடன் பேசிய சமுத்திரக்கனி, அப்போது, “இதெல்லாம் என்ன விளையாட்டா?. யாரை பழிவாங்க இதை செய்கிறாரு?. இருந்ததும் போச்சி. நல்ல இருந்தது. ஒரு பிரச்சனை நடக்கும்போது நடிகையை கூட்டிட்டு வாராரு. இதை அவர் நான்கு சுவற்றுக்குள் வைத்துக்கொள்ளவேண்டும். சொந்த கட்சிக்காரர்களே இதற்குமேல் முட்டுக்கொடுக்க முடியாது என சொல்கிறார்கள்” என அந்த வீடியோவில் நடிகர் சமுத்திரக்கனி கடுமையாக பேசியுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: கொரியா-ல பாண்டிய இளவரசி செம்பவளம் சமாதி இருக்கு… நடிகை பிரியங்கா மோகன் பகிர்ந்த சுவாரஸ்ய விஷயம்!

விஜய் குறித்து கடுமையாக நடிகர் சமுத்திரக்கனி பேசிய வீடியோ பதிவு:

சமீபகாலமாக நடிகர் விஜய் மற்றும் சங்கீதா தம்பதியின் விவாகரத்து வழக்கு, தமிழ் மக்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா, நடிகை ஒருவரை குறிப்பிட்டு அதனால் திருமண வாழ்க்கையில் சிக்கல் வந்ததாக தெரிவித்திருந்தார். அந்த வகையில் பிரபல நடிகை ஒருவரை விஜய் நிகழ்ச்சி ஒன்றிற்கு தன்னுடன் அழைத்து சென்றது. மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து பல தமிழ் பிரபலங்களும் விமர்சித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us