AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது – விஜய் சேதுபதி

Vijay Sthupathi talks about VJ Parvathy: தொடர்ந்து சினிமாவில் படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி அவ்வபோது இணையதள தொடர்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நடித்துள்ள இணையதள தொடர் காட்டான். இந்த காட்டான் தொடரின் விழாவில் கலந்துகொண்ட போது விஜே பார்வதி குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது – விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி - விஜே பார்வதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Mar 2026 13:55 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களில் மட்டும் இன்றி இணையதள தொடர்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி உள்ள இணையதள தொடர் காட்டான். இந்த தொடர் நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த தொடரின் படக்குழுவினர் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தினர். அதில் அந்த தொடரில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர்.

அந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி காட்டான் படக்குழுவினர் குறித்தும் விஜே பார்வதி குறித்தும் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜே பார்வதி முன்னதாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பல சர்ச்சைகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவருடன் இணைந்து நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே தோன்றுகிறது:

அந்த விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது விஜே பாருவுடன் எனக்கு அவ்வளவாக ஒத்துப் போவதில்லை. ஒவ்வொரு வாரமும் அவளிடம் பேசிப் பேசியே நான் ஏற்கனவே சலித்துவிட்டேன். அவள் மீது உங்களுக்கு வருத்தம் இருக்கலாம். ஆனால் ‘காட்டான்’ (Kaattaan) இணையத் தொடரில் அவளது நடிப்பு நன்றாக இருக்கிறது. இருப்பினும், நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது என்று விஜய் சேதுபதி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Also Read… Rio07 Movie: ரியோ ராஜின் 7வது படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடக்கம் – டைட்டில் என்ன தெரியுமா?

காட்டான் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Oru Naal Movie: தமிழிலும் வெளியாகும் சாய் பல்லவியின் இந்தி திரைப்படம்.. வெளியானது ‘ஒரு நாள்’ படத்தின் ட்ரெய்லர்!

Follow Us