AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இயக்குநராக நான் இயக்கிய படங்களைவிட கருப்பு 15 மடங்கு பெரிய படம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி

Director RJ Balaji Talks about Karuppu Movie: தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் உருவாக உள்ள படம் கருப்பு. இந்தப் படம் குறித்து படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசியது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இயக்குநராக நான் இயக்கிய படங்களைவிட கருப்பு 15 மடங்கு பெரிய படம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Mar 2026 12:12 PM IST

ரேடியோவில் ஆர்.ஜே.வாக தனது பணியைத் தொடங்கியவர்தான் ஆர்.ஜே.பாலாஜி. தொடர்ந்து இவர் ஆர்.ஜேவாக இருக்கும் போதே தமிழக மக்களிடையே நன்கு கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து படங்களில் சின்ன சின்ன காமெடி கதாப்பாத்திரங்களில் நடிப்பதன் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். பிறகு நாயகன்களின் நண்பராக தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வந்த நடிகர் ஆர்.ஜே. பாலாஜி பிறகு சினிமாவில் கதையின் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து தான் நாயகனாக நடிக்கும் படங்களை அவரே இயக்கவும் தொடங்கினார் ஆர்.ஜே.பாலாஜி. தொடர்ந்து நாயகனாக இவரது படங்கள் வெற்றி அடைந்தது போல இயக்குநராகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தான் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கி வந்த ஆர்.ஜே.பாலாஜி தற்போது மற்ற நாயகன்கள் நடிக்கும் படங்களை இயக்க தொடங்கியுள்ளார். அதன்படி ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தற்போது நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள படம் கருப்பு. இந்தப் படம் வருகின்ற மே மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குநராக நான் இயக்கிய படங்களைவிட கருப்பு 15 மடங்கு பெரிய படம்:

சூர்யா சார் ஒரு சூப்பர் ஸ்டார், ஆனால் அவர் ஒரு புதுமுகம் போன்ற உணர்வைத் தருகிறார். கருப்பு ஒரு வலுவான, வணிக ரீதியான திரைப்படம், இது முழு குடும்பத்தினரையும் கவரும். கடந்த பத்தாண்டுகளில் நீங்கள் தமிழ் சினிமா பார்த்திருந்தால், கதாநாயகர்கள் பெரும்பாலும் ரவுடி, குண்டர், டான் அல்லது போலீஸ் போன்ற பாத்திரங்களிலேயே நடித்திருக்கிறார்கள். வேறு எந்தத் தொழில்களும் இல்லாதது போல இருக்கிறது.

நான் பார்த்து வளர்ந்த காலத்தில் பார்த்த கதாநாயகர்கள், பால்காரர், டீக்கடை உரிமையாளர், ஆசிரியர் அல்லது ஓட்டுநர் என அன்றாட வேலைகளைச் செய்பவர்களாகவே இருந்தனர். கருப்பு, நாம் கடந்த காலத்தில் ரசித்த அத்தகைய படங்களின் கூறுகளைக் கொண்டிருக்கும், ஆனால் ஒரு வலுவான சமூகச் செய்தியுடன். ஏனென்றால், ஒரு திரைப்படத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன்.

Also Read… கர படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு கதாப்பாத்திரத்தின் பெயர் இதுதான் – வெளியானது போஸ்டர்

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:

Also Read… ஒன்றாக தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்ற விரோஷ் தம்பதி- ஜோடியாக வெளியிட்ட வீடியோ!

Follow Us