வாரிசு படத்தை விஜய்யை மட்டும் நம்பி எடுக்கல… தில் ராஜு அதிரடி கமெண்ட்
Producer Dil Raju: தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் தயாரிப்பாளர் தில் ராஜூ. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தில் ராஜு பேசியது தற்போதும் மீம்ஸ்களில் இடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் (Actor Vijay) நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் வாரிசு. இந்தப் படத்தை தெலுங்கு சினிமா இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி எழுதி இயக்கி இருந்தார். மேலும் படத்தை தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிர்யேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு இந்தப் படத்தை தயாரித்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதாவது, “வாரிசு படத்தை விஜய்யை மட்டும் நம்பி பண்ணல, இயக்குநர் வம்சியை நம்பித்தான் தயாரித்தேன் என தில் ராஜு சொல்கிறார். அதற்கு தொகுப்பாளர், திரும்ப இது போல பண்ணுவீர்களா என கேட்க, நிச்சயம் மாட்டேன் என்கிறார்.
சர்ச்சையை கிளப்பிய தயாரிப்பாளர் தில் ராஜுவின் பேச்சு:
அதன்படி தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதாவது, தமிழில் விஜய் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். ஆனால் என்னிடம் கண்டென்ட் இருந்தது. அதுவும் என்னுடைய ஸ்டைலில் கண்டென்ட். பின்னர் இயக்குநர் வம்ஷியிடம் விஜய்க்கு இப்படி ஒரு மார்க்கெட் இருக்கு. அதனால் இந்த பட்ஜெட்டிற்குள் படமெடுக்க வேண்டும் என பேசி, பின்னர் இது ஹிட்டாகுமா இல்லையா என்பதை ஆராய்ந்த பிறகு தான் படத்தை தொடங்கினோம்.
மேலும் விஜயின் பிரபலத்தை மட்டும் நம்பி நான் படம் எடுக்கவில்லை. எனது இயக்குநர் மீது இருந்த நம்பிக்கையும், அவரின் கதை மீது எனக்கு இருந்த நம்பிக்கையும்தான் இந்தப் படத்தை எடுக்க முக்கிய காரணம் என்று தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்தார். இவர் இப்படி பேசியது இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இணையத்தில் கவனம் பெறும் தயாரிப்பாளர் தில் ராஜு வீடியோ:
DilRaju – For Varisu, I trusted not just Vijay, most importantly I believed in my director Vamshi. I calculated everything & produced the movie.
Anchor – Will you produce movies again the same way ?#DilRaju – NOOOO, I will NOT.@actorvijay utcham 😂 pic.twitter.com/7Cn4r2xiCZ
— Kingsley (@CineKingsley) July 1, 2025
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா சண்முகநாதன், நந்தினி ராய், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் சுமன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.