AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோழையும் வீரனும் ஒன்னு, வீரமான கோழையும் உண்டு – 9 ஆண்டுகளைக் கடந்தது விக்ரம் வேதா படம்

9 Years Of Vikram Vedha Movie starring actors Madhavan and Vijay Sethupathi | தமிழ் சினிமாவில் நடிகர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற விக்ரம் வேதா படம் 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

கோழையும் வீரனும் ஒன்னு, வீரமான கோழையும் உண்டு – 9 ஆண்டுகளைக் கடந்தது விக்ரம் வேதா படம்
விக்ரம் வேதா படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Jul 2026 17:17 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 21-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் விக்ரம் வேதா. ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் ஒரு கேங்கஸ்டர் படமாக உருவான இந்த விக்ரம் வேதா படம் தமிழ் சினிமாவில் வெளியான கேங்ஸ்டர் படங்களில் சிறந்த படமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. தற்போதும் தமிழ் சினிவில் ரசிகர்கள் இந்த விக்ரம் வேதா படத்தை அதிக அளவில் கொண்டாடி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் படத்தின் வசனம் தான். மேலும் இந்தப் படத்திற்கு வசனம் எழுதியது யார் என்று பலருக்கும் தெரியாது. அவர் வேற யாரும் இல்லை தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உள்ள நடிகர் மணிகண்டன் தான். இவர் இந்தப் படத்திற்கு எழுதிய வசனம் தான் படத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தினை இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இருவரும் இணைந்து இயக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான YNOT ஸ்டுடியோஸ் தயாரித்தது. இந்தப் படத்தில் நடிகர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்து இருந்தது படத்திற்கு மேலும் வழு சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… Hi Movie: சூர்யா படத்துடன் மோதும் கவினின் படம்.. வெளியான ரிலீஸ் அறிவிப்பு புரோமோ!

9 ஆண்டுகளைக் கடந்தது விக்ரம் வேதா படம்:

காவல்துறை அதிகாரியாக இருக்கும் மாதவன் அந்த ஊரில் மிகப்பெரிய கேங்ஸ்டரான விஜய் சேதுபதியை தேடிப் பிடிப்பதே தனது முதல் வேலையாக வைத்து தேடி வருகிறார். அப்படி ஊரே தேடி வரும் விஜய் சேதுபதி நேரடியாக மாதவனை வந்து பார்த்து சரணடைகிறார். பிறகு அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து விவரிப்பதுதான் படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றதுகுறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ரசிகர்கல் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… நிவின் பாலியின் ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் எப்போது? – தேதியுடன் வெளியான டீசர்!

Follow Us