சிறு வயதில் மகனை தொலைத்து தேடும் தாய்… ஓடிடியில் வெளியாகியுள்ள சன்னிதானம் P.O படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Sannidhanam P.O Movie OTT Review Here | தமிழ் சினிமாவில் நடிகர் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியான படம் சன்னிதானம் P.O. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. காமெடி நடிகராக தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நடிகை யோகி பாபு அவ்வபோது தமிழ் சினிமாவில் கதையின் நாயகனாகவும் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் யோகி பாபு நடிப்பில் வருடத்திற்கு பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து நடிகர் யோகி பாபு நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இதுவரை மொத்தம் 8 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதில் நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்தது இரண்டு படங்கள் ஆகும். அதில் ஒரு படம் தான் சன்னிதானம் P.O படம்.
இந்த சன்னிதானம் P.O படத்தை இயக்குநர் அமுதா சாரதி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு உடன் இணைந்து நடிகர்கள் சித்தாரா, ரூபேஷ் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத், பிரமோத் ஷெட்டி, மூணார் ரமேஷ், விசாலினி, வினோத் சாகர், கஜராஜ், கல்கி ராஜா, சாத்விக், ராஜருத்ரகோடி, டிஎஸ்ஆர் சீனிவாசன், அஸ்வின் ஹாசன், ராம் ராஜேந்திரன், ஹரி ஆர் மேனன், பித்திரை செல்வம், மித்ரன் மற்றும் குளோபல் சுப்ரமணியன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
சன்னிதானம் P.O படத்தின் கதை என்ன?
வாய் பேசமுடியாத அம்மாவிற்கு பிறக்கும் யோகி பாபுவும் பிறந்ததில் இருந்தே வாய் பேச முடியாமல் இருக்கிறார். அவருக்கு பேச்சு வர வேண்டும் என்று பல வேண்டுதல்களை யோகி பாபுவின் தாய் பல கோவில்களில் செய்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு தனது மகனுக்கு மாலை அணிவித்து கூட்டிச் செல்கிறார் அந்த தாய்.




Also Read… தேசிய விருது பெற்றவர்களை கொண்டாடிய ஓம் படக்குழுவினர் – வைரலாகும் போஸ்ட்
7 வயதில் தனது மகனை சபரிமலைக்கு கூட்டிச்செல்லும் அந்த தாய் அந்த மகனை தொலைத்துவிடுகிறார். அப்படி தொலைந்துபோன நடிகர் யோகி பாபுவிற்கு ஒரு விபத்தில் பேச்சு வருகிறது. தனது அம்மா குறித்த நினைவுகளும் மறக்கின்றது. தொடர்ந்து தனது குழந்தையையை பல ஆண்டுகளாக தேடி வருகிறார் அந்த தாய். இறுதியில் நடிகர் யோகி பாபு தனது அம்மா உடன் இணைந்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… தமிழ்நாட்டில் மட்டும் ஜன நாயகன் ப்ரீ புக்கிங்கிள் இத்தனை கோடிகள் வசூலா? வைரலாகும் தகவல்