துருவ் விக்ரம் குரலில் வெளியாகும் ஹாய் படத்தின் குடிகார நெஞ்சு பாடல்
Dhruv Vikram sing a song for Hi movie | நடிகர் துருவ் விக்ரம் தொடர்ந்து படங்களில் நாயகனாக நடிப்பது மட்டும் இன்றி பாடல்களையும் பாடி வருகிறார். அந்த வகையில் ஹாய் படத்தில் அவர் பாடிய பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் துருவ் விக்ரம். தொடர்ந்து படங்களில் நாயகனாக நடித்து வரும் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பைசன் காளமாடன். இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் தற்போது தனது 4-வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இயக்குநர் கரண் அரவிந்த் குமார் அந்தப் படத்தை எழுதி இயக்கி வருகிறார். இவர் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிசியாக உள்ள நடிகர் துருவ் விக்ரம் நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ஹாய் படத்தில் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார். அது தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




அதன்படி இந்தப் ஹாய் படத்தினை இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதி இயக்கி உள்ள நிலையில் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இன்று மாலை ஹாய் படத்தில் இருந்து குடிகார நெஞ்சு என்ற பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலை நடிகர் துருவ் விக்ரம் பாடியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் பாடல் வெளியீட்டிற்காக ரசிகர்கள் தற்போது ஆவளுடன் காத்திருக்கின்றனர்.
Also Read… வெற்றிநடைபோடும் நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் படம் – கொண்டாட்டத்தில் படக்குழு
ஹாய் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Dhruv Vikram’s voice. Kudikara Nenju’s vibe. 🎶🔥
Releasing Today at 5:04 PM! ❤️🔥Get ready to feel the vibe! 🎧✨#HiMovie Mark your calendars for AUGUST 28 as the most heartwarming entertainer of the season arrives in theatres.
Get ready for the fun-filled Hi, featuring… pic.twitter.com/4X5atdGQdC
— Zee Studios South (@zeestudiossouth) August 24, 2026
Also Read… Sivakarthikeyan: எப்போதும் எனது சொக்கத் தங்கம் அவர்கள்தான் – சிவகார்த்திகேயன் பேச்சு!