மலையாள சினிமாவில் புதிய சாதனைப் படைத்தது பெத்தலேக குடும்ப யூனிட் படம் – வைரலாகும் பதிவு
Bethlehem Kudumba Unit Set New Record In Malayala Cinema | மலையாள சினிமாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது பெத்தலேக குடும்ப யூனிட் படம். இந்தப் படம் தற்போது மலையாள சினிமாவில் புது சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவர் மலையள சினிமாவில் நடிகராக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். மேலும் இவரது நடிப்பில் வெளியான பிரேமம் என்ற படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றதுடன் நடிகர் நிவின் பாலியை பான் இந்திய மொழிகளில் உள்ள ரசிகர்களிடையே பிரபலமாக்கியது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்த நடிகர் நிவின் பாலிக்கு சினிமா வாழ்கையில் சற்று சறுக்கள் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் கம்பேக் கொடுத்த நடிகர் நிவின் பாலி தொடர்ந்து தற்போது ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் இறுதியாக மலையாள சினிமாவில் வெளியான படம் பெத்தலேக குடும்ப யூனிட். இயக்குநர் கிரிஷ் ஏடி எழுதி இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.




மலையாள சினிமாவில் புதிய சாதனைப் படைத்தது பெத்தலேக குடும்ப யூனிட்:
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்தப் படம் பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் கேரளாவில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக இந்த பெத்தலேக குடும்ப யூனிட் படம் சாதனைப் படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2025-ம் ஆண்டு வெளியான லோகா சாப்டர் 1 சந்திரா படம் 45 நாட்களில் உலக அளவில் ரூபாய் 300 கோடிகளை வசூலித்து சாதனைப் படைத்த நிலையில் அந்த சாதனையை தற்போது பெத்தலேக குடும்ப யூனிட் படம் முறியடித்துள்ளது. அதன்படி இந்தப் படம் 25 நாட்களிலேயே ரூபாய் 300 கோடிகளை வசூலித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையைப் படக்குழு தற்போது கொண்டாடி வருகின்றது.
Also Read… பிரபல பாடகியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனா? வைரலாகும் தகவல்
நடிகர் நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Rewriting History with Love ♥️#BKU is now the ALL TIME HIGHEST GROSSING Malayalam Movie in Keralam, achieving the milestone in 24 days!
@_mamithabaiju @iDileeshPothan @PharsFilm @MythriRelease @BhavanaStudios
#BethlehemKudumbaUnit pic.twitter.com/UFidjgAg3X
— Nivin Pauly (@NivinOfficial) September 13, 2026
Also Read… சம்பளத்தை உயர்த்திய நடிகர் சூரி? அடுத்தப் படத்திற்கு இத்தனை கோடிகளா – வைரலாகும் தகவல்