AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Ajith Car Race: சீறிபாய்ந்த அஜித்தின் கார்.. ஒன்றாக கண்டு ரசித்த விஜய் – த்ரிஷா!

CM Vijay In Silverstone: சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த 'மோட்டார் விளையாட்டு சிட்டி' ஒன்று அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, விஜய் உலகின் முன்னணி மோட்டார் விளையாட்டு மையம் அமைந்துள்ள லண்டன் சில்வர்ஸ்டோனுக்கு சென்றுள்ளார்.

Ajith Car Race: சீறிபாய்ந்த அஜித்தின் கார்.. ஒன்றாக கண்டு ரசித்த விஜய் – த்ரிஷா!
முதலமைச்சர் விஜய் - த்ரிஷா
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 12 Sep 2026 23:06 PM IST

தமிழ் திரையுலகில் 2 ஜாம்பவான்களான விஜய் (Tamil Nadu CM Vijay) மற்றும் அஜித் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிதீவிரமாக பரவி வருகிறது. நடிகராக இருந்த விஜய் தற்போது நடிப்பில் இருந்து விலகி முழுமையான அரசியலில் ஈடுபட்டுள்ளார். அதேநேரத்தில், நடிகர் அஜித் குமார் அவ்வபோது ஏதேனும் ஒரு படத்தில் நடித்தாலும், முழு நேரமாக கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில், தமிழ்நாட்டின் முதலைமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, நடிகர் அஜித்தின் ஏற்பை ஏற்று விஜய் முதன்முறையாக லண்டனுக்கு சென்றுள்ளார். இதற்கிடையில், நடிகை திரிஷாவும் சக நடிகராக அஜித் கார் (Ajith Kumar) ரேஷ் பார்க்க வந்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

ALSO READ: நடிகர் அஜித் பங்கேற்கும் கார் ரேஸ் – கொடியசைத்து துவக்கிவைத்த முதல்வர் விஜய்

மோட்டார் விளையாட்டு சிட்டி:


சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த ‘மோட்டார் விளையாட்டு சிட்டி’ ஒன்று அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, விஜய் உலகின் முன்னணி மோட்டார் விளையாட்டு மையம் அமைந்துள்ள லண்டன் சில்வர்ஸ்டோனுக்கு சென்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக, விஜய் புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்கு’ சென்று, அங்கு நடைபெறும் கார் பந்தயத்தை கண்டு ரசித்ததாக என லெ மான்ஸ் கோப்பை நிர்வாக அமைப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் தனது அணியுடன் இந்த கார் பந்தயத்தில் பங்கேற்றுள்லார். அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் பச்சை கொடியை காட்டி தொடங்கி வைத்த செய்தி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பந்தயத்தில் பங்கேற்பதற்காக அஜித் லண்டனில் தங்கி, தனது அணியுடன் பயிற்சி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை த்ரிஷாவுடன் போட்டியை ரசித்த விஜய்..


விஜய் லண்டன் சென்றபோதே த்ரிஷா அங்கு இருந்ததாகவும், அவர்கள் இருவரும் தற்போது ஒன்றாக நின்று போட்டியை ரசித்தனர். இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவியது. முன்னதாக, நடிகை த்ரிஷா, அஜித்தை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: பல ஆண்டுகள் நட்பு.. அஜித் குமாரை சந்தித்த முதல்வர் விஜய் – தீயாய் பரவும் வீடியோ!

முன்னதாக ராதிகா சரத்குமார், த்ரிஷாவுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். சமீபத்தில் லண்டன் கஃபே ஒன்றில் த்ரிஷா இருந்த வீடியோ ஒன்று வைரலானதால், இது த்ரிஷா லண்டனில் இருக்கிறார் என்பது உறுதியானது.

Follow Us