AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வெறும் கனவு காண்பதோ அல்லது நினைப்பதோ மட்டும் போதாது – புது காருடன் மாஸான போஸ்டை வெளியிட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா… வைரலாகும் பதிவு

Chinna Marumagal serial actress Swetha bought a new car | தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் என்ற சீரியலின் நாயகி ஸ்வேதா புதிய கார் வாங்கியுள்ளார். அந்த காருடன் அவர் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வெறும் கனவு காண்பதோ அல்லது நினைப்பதோ மட்டும் போதாது – புது காருடன் மாஸான போஸ்டை வெளியிட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா… வைரலாகும் பதிவு
நடிகை ஸ்வேதாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Oct 2026 14:24 PM IST

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறுவது மட்டும் இன்றி அந்தப் படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. ஆனால் வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகமாக உள்ளது. அதன்படி சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தினமும் ஒளிபரப்பாவதால் ரசிகர்கள் அந்த சீரியல்களில் நடிக்கும் நடிகர்களை தங்களது குடும்பத்தில் இருக்கும் ஒருவரைப் போல பார்ப்பது மட்டும் இன்றி அவர்களை கொண்டாடி வருகின்றனர். அதன்படி தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சேனல்களில் அதிக அளவில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அதிக அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அதன்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியல் மக்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த சின்ன மருமகள் சீரியலில் நாயகியாக உள்ள ஸ்வேதா தனது புதிய கார் உடன் ஒரு பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புது காருடன் மாஸான போஸ்டை வெளியிட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகை:

அதன்படி நடிகை ஸ்வேதா வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, எனது 2026 விஷன் போர்டில் (Vision Board) இடம்பெற்றிருந்த முதல் விஷயம், எனக்கென ஒரு சொந்தக் காரை வாங்குவதுதான். அதுவும் சிறிய அளவிலான (compact), எனக்கு மிகவும் பிடித்தமான, மற்றும் நானே சொந்தமாக உழைத்து வாங்கிய ஒரு காராக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.

வெறும் கனவு காண்பதோ அல்லது அதை ஈர்க்க நினைப்பதோ (manifesting) மட்டும் போதாது. அதற்காக உழைக்கவும் வேண்டும். இதற்காக நான் பல மாதங்களாக உழைத்தேன். இன்று, என் சொந்த உழைப்பில் கிடைத்த பணத்தைக் கொண்டு அந்தக் காரை வாங்கிவிட்டேன்.

என் விஷன் போர்டில் இருந்த கனவு இப்போது என் கண்முன்னே நிற்கிறது. தயவுசெய்து யாருடைய கண் திருஷ்டியும் படக்கூடாது. இதைச் சாத்தியமாக்கிய இறைவனுக்கு நன்றி என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… காதல் திருமண வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம்… மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தது இறுகப்பற்று படம்!

நடிகை ஸ்வேதா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Swetha (@swetha.officiall)

Also Read… Drones: ஜஸ்ட் ஃபார் லவ்.. மிஸ்ட்ரி பேண்ட்ஸி கதையில் உருவான ட்ரோன்ஸ் பட ட்ரெய்லர் வெளியீடு!

Follow Us