கோவையில் அராஜகம்.. நடுரோட்டில் முட்டி மோதி நின்ற தனியார் பேருந்துகள்.. பயணிகள் மரண பயம்!!
ஆத்திரமடைந்த ஓட்டுநர்கள், பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த அந்த நடுரோட்டிலேயே இரண்டு பேருந்துகளையும் ஒன்றோடொன்று மோதும் வகையில் ஆபத்தாக முட்டி நிறுத்தியுள்ளனர். வண்டிகள் மோதிக்கொண்ட சத்தத்தில் பேருந்துக்குள் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் அனைவரும் விபத்து ஏற்பட்டுவிட்டதோ என்ற மரண பயத்தில் அலறியடி கூச்சலிட்டனர்.
கோவை, ஜூலை 01: கோவையில் தொழில் போட்டி காரணமாக இரண்டு தனியார் பேருந்துகளை நடுரோட்டிலேயே ஒன்றோடொன்று முட்டி மோதி நிறுத்தி, அதன் ஊழியர்கள் பயங்கர தகராறில் ஈடுபட்ட சம்பவம், பேருந்துப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. லாப வெறியால் பயணிகளின் உயிருடன் விளையாடும் தனியார் பேருந்து ஊழியர்களின் இந்த அராஜகம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: இளைஞர்- இளம் பெண் தூக்கில் சடலமாக மீட்பு.. தற்கொலையா? ஆணவ படுகொலையா? பரபரப்பில் மயிலாடுதுறை!
டைமிங் விவகாரத்தில் மோதல்:
கோவை காந்திபுரத்தில் இருந்து புலியகுளம், சவுரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான அரசு மற்றும் தனியார் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் இயங்கும் சில தனியார் பேருந்து ஊழியர்கள், அதிக பயணிகளை ஏற்ற வேண்டும் என்ற நோக்கில், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சரியான நேரத்தைப் பின்பற்றாமல் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேருந்துகளைக் காலம் தாழ்த்தி இயக்குவது அல்லது நேரத்திற்கு முன்னதாகவே அதிவேகமாக இயக்கி ‘ரேஸ்’ போடுவது எனப் பயணிகளின் உயிருடன் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
இதன் உச்சக்கட்டமாக, உப்பிலிபாளையம் வழியாக இயங்கக்கூடிய ‘கோகுலம்’ என்ற தனியார் பேருந்தும், பேரூர் வழியாக இயங்கக்கூடிய ‘ஸ்ரீதேவி’ என்ற தனியார் பேருந்தும் புலியகுளம் – சவுரிப்பாளையம் சாலையில் அடுத்தடுத்து வந்துள்ளன. அப்போது ‘டைமிங்’ விவகாரத்தில் இரு பேருந்துகளின் ஊழியர்கள் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
அலறிய பயணிகள் – ஸ்தம்பித்த போக்குவரத்து:
ஆத்திரமடைந்த ஓட்டுநர்கள், பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த அந்த நடுரோட்டிலேயே இரண்டு பேருந்துகளையும் ஒன்றோடொன்று மோதும் வகையில் ஆபத்தாக முட்டி நிறுத்தியுள்ளனர். வண்டிகள் மோதிக்கொண்ட சத்தத்தில் பேருந்துக்குள் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் அனைவரும் விபத்து ஏற்பட்டுவிட்டதோ என்ற மரண பயத்தில் அலறியடி கூச்சலிட்டனர்.
அத்துடன் நிறுத்தாமல், இரு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சாலையில் இறங்கி ஒருவரையொருவர் ஆபாசமாகத் திட்டி, கைகலப்பில் ஈடுபடும் நோக்கில் பயங்கரமாக மோதிக்கொண்டனர். புலியகுளம் – சவுரிப்பாளையம் சாலையில் இரண்டு பேருந்துகள் குறுக்காக மோதி நின்றதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் போவதற்கு வழியின்றி கிலோமீட்டர் கணக்கில் நீண்ட வரிசையில் நின்று வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
மேலும் படிக்க: நெல்லை 3 சிறுமிகள் வன்கொடுமை வழக்கு.. காமுகனின் தூக்கு தண்டனையை உறுதி செய்த மதுரை உயர்நீதிமன்றம்!
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:
தனியார் பேருந்து ஊழியர்களின் இந்தத் தொடர் ‘ரோட் ரேஜ்’ அராஜகத்தால் எந்த நேரத்திலும் பெரும் விபத்து ஏற்பட்டுப் பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் நீடிக்கிறது. எனவே, வட்டாரப் போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறையினர் உடனடியாக இந்தக் குறிப்பிட்ட ‘கோகுலம்’ மற்றும் ‘ஸ்ரீதேவி’ பேருந்து ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், இவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து, பேருந்தின் வழித்தட உரிமத்தை முடக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.