AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: 30 நாட்கள் சர்க்கரை இல்லாத வாழ்க்கை.. உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

Quit Sugar For 30 Days: 30 நாட்களுக்கு சர்க்கரையைத் தவிர்த்தால், அதன் விளைவுகளை உடல் எடையில் மட்டுமல்ல, உடலின் பல பாகங்களிலும் காணலாம். உண்மையில், அதிக சர்க்கரை உட்கொள்வது உடல் பருமன், வகை 2 நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் கொழுப்பு கல்லீரல் போன்ற பல தீவிர பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். இந்தநிலையில், 30 நாட்கள் சர்க்கரை தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Jul 2026 20:28 PM IST
சர்க்கரையை தவிர்ப்பது என்பது னிப்பான பழங்கள், காய்கறிகள் அல்லது பாலையும் தவிர்க்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இவற்றை தாராளமாக எடுத்து கொள்ளலாம். அதேநேரத்தில், குளிர்பானங்கள், இனிப்புகள், மிட்டாய்கள், கேக்குகள், குக்கீகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், சுவையூட்டப்பட்ட தயிர், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள் மற்றும் பல்வேறு சாஸ்கள் போன்ற, சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதே ஆகும்.

1 / 5
மேலே குறிப்பிடப்பட்டுள்ள உணவுக்கு பதிலாக பிரஷான பழங்கள், பச்சை காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், முட்டைகள், மீன், கோழி, கொட்டைகள் மற்றும் சமச்சீரான, வீட்டில் சமைத்த உணவை உண்ணுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

2 / 5
தொடர்ந்து 30 நாட்களுக்கு சேர்க்கப்பட்ட சர்க்கரையைத் தவிர்த்தால், அதன் முதல் பலனை உங்கள் இரத்தச் சர்க்கரை அளவில் காணலாம். அடிக்கடி இனிப்புகளை உட்கொள்வது இரத்தச் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கச் செய்து, காலப்போக்கில் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். எனவே, சர்க்கரையைக் குறைப்பது இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும்.

3 / 5
உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் இந்த மாற்றம் நன்மை பயக்கும். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளில் கலோரிகள் அதிகமாகவும், நார்ச்சத்து மற்றும் புரதம் குறைவாகவும் உள்ளன. இவற்றைக் குறைப்பது, அதிகப்படியான கலோரி உட்கொள்ளலைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்.

4 / 5
சர்க்கரையை தவிர்ப்பது பல் ஆரோக்கியத்திலும் ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். வாயில் உள்ள பாக்டீரியாக்கள் சர்க்கரையை உடைத்து அமிலங்களை உருவாக்குகின்றன, அவை பற்களைச் சேதப்படுத்தக்கூடும். சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது, பல் சொத்தை மற்றும் பல் சிதைவு ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.

5 / 5
Follow Us